Tuesday, 30 July 2013

அம்மா













                                                                      அம்மா 


என் எண்ணமெல்லாம் என்றென்றும் நிறைத்துவிட்டு
இன்று நீ காணாமல் போய் விட்டாய்.....
இல்லை இல்லை , இன்றும் என் ஒவ்வொரு நினைவிலும் நீ இருக்கிறாய்

பசுமையாக எங்களுக்கு உரு துணையாய் நீ இருந்தாய்
செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் உன் முத்திரை
ஈடில்லா உன் பக்தியும்
அளவில்லா உன் பணிகளும்
தளறாத உன் உழைப்பும்
சலியாத உன் மனமும்
என்றும் தவறாத உன் கணிப்பும்
கூரான உன் புத்தியும் ......
இன்னும் எத்தனையோ ....
உருவுடன் நீ இங்கு இல்லாவிட்டாலும்
எங்கள் கருத்தினில் இருந்து
என்றும் எங்களை வழி நடத்துவாயாக.....



                                                 அம்மா





 


பன்னிரெண்டு வயதில் பயந்து பயந்து ,
பாவாடையில், புக்காத்தில் பாதம் பதித்தாய்
பாசத்தை சேர்த்துவைத்து எங்களுக்கு
பகிர்ந்து கொடுப்பதற்காகவே !

உன்னைக்  கொண்டவர், கண் காணா  இடத்தில்,
நீயோ கண்களில் கனவுகளோடு  காத்திருந்தாய்
"தியாகு" என்ற பெயரில் தியாகத்தை எங்களுக்கு
தங்கு தடையின்றி அன்றே தொடங்கிவிட்டாயே

மச்சினரும் நாத்தனாரும் நாளும் மெச்ச
மெட்டி ஒலி  எட்டாத ஒலியாக, ஓடி உழைத்தாயே
அதுவே உன்னை எல்லாரும் சித்தி , சித்தி
என்று சுத்தி வரவைத்ததே

பூத்த மலர்கள் ஐந்து ஆனாலும், ஒரு மலரை
நெஞ்சில் வைத்தாய் , மற்ற நால்வரையும்
நல்லவராக்க நாளும் நினைத்து தேய்ந்தாயே

ஸைபர் ஸ்வாமியையே, நித்தமும் வலம் வந்தாயே
எங்களுக்காக புண்ணியத்தை விதையாக விதைத்து
அதன் அறுவடையை எங்களுக்கு அற்பனித்தாயே

"மாமாவே" நமக்கு எல்லாம் என்பதில் உறுதியாக இருக்க,
எங்களுக்கு ஊட்டினாயே ஓயாமல் போதனை

முனிவர்கள் தவமிருக்கலாம், ஆனால் நீயோ
முடியாவிட்டாலும் எங்களுக்காக முக்காலமும் பூஜையிலிருந்தாய்

தந்திரமாக சுதந்திர தினத்தை தேர்ந்தெடுத்தாய்
"மாமா" மந்திரத்தை உச்சரித்து
அவரை நச்சரித்து
அவரது பாதாரவிந்தை சென்று அடைந்தாயே


எங்களை எந்திரமாக ஆக்க எப்படி மனம் வந்தது !

என்றும் உன் நினைவோடு -

பாசமலர்கள்

அம்மா வின் மனம் நெகிழ வைக்கும் பல விடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்



​அம்மாவின் பக்தி ​



அம்மா சொல்லும் ரெசிப்பி

அம்மாவின் கைவண்ணம்  


Advice !!



 



OUR GROUP SONGS