இருக்கும் இடத்திலேயே (அண்ணாநகர்), இல்லாளை கண்டாயே
தங்கமான தாரகை , பார்வதி மண்டபத்தில் பாரியாள் ஆனாளே
ஒரே மகளாக வளர்ந்து ,நம் குடும்பத்தில் மருமகளாக வந்தது வரமே
திருமணத்தில் இணைந்த மல்லிகா நம் வளமான உறவுக்கு உரமே
நம் கலகலப்பு சாமாவுடன் கைகோர்த்து நிலம் பார்த்து வலம் வந்தவளே
பெற்றோர் ஆசியுடன் குடும்பத்தில் பாந்தமான பந்தமாக நிலைகொண்டாயே
வங்கியில் சேர்ந்து இங்கு எங்கனாதபடி எல்லா மாநிலமும் மாறி
அந்தமானில் அடைக்கலமாகி ,கர்நாடகாவில் கயண்டுகொண்டாயே
எங்களுடனே இருக்க சென்னையில் நின்னாயே ,நிலைத்தாயே
நம் சாமா இருக்குமிடம் என்றேன்றும் கொப்பளிக்கும் குதூகலமாக
எந்த சூழ்நிலையிலும் கைகுடுக்கும் மல்லிகா தருவது மனநிறைவு
நம் குடும்பத்தின் செல்லபிள்ளையாக வந்தானே விக்னேஷ்
நம் அனைவரது பாசபினைப்பிற்கு இணைப்பாக இருப்பவனே
இருபத்தியேழு வருட மணநாள், எந்நாளும் நன்னாலானதே
வரும் நாள்கள் அனைத்தும் மனநிறைவாக வாழ வாழ்த்துக்கள்