பதினெட்டில் பிறந்து
என்றும் பதினெட்டாய் தோன்றும்
என் அருமை மருமானே
பதினெட்டு படியேறி
ஐயப்பனை காணும் உன்
பதினெட்டு பெருமையை
என் பதிவேட்டில் தருகிறேன் பார் !
அடக்கம், அமைதி, அன்பு, அறிவு
கனிவு, குறும்பு,
தளர்விலா உழைப்பு,
பணிவு, பண்பு, படிப்பு,
துணிவு, துடிப்பு , துடுக்கு, மிடுக்கு
உன் தோற்றமோ எடுப்பு
புன்னகையே உன் நகை
நீ சிரித்தால் இடி !
பேசினாலோ கடி !
(ஹி ஹி ஹி ஹி
)
காந்தமாய் இருக்கும் நீ ரஜினிகாந்திடம்
மயங்குவதேனோ
பெருமை சேர்த்த
உன் பெருமையும் திறமையும் பாட
பல நூறு ஆண்டு நீ
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ
எங்கள் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
--------பாசமலர்களும் மொட்டுக்களும்
Lets Dance and celebrate !
