Tuesday, 28 April 2015

விழித்திரைக்கு ஒரு கவிதை

விழித்திரைக்கு ஒரு கவிதை

முதுமை தந்த பாெறுமை, 
நரை முடியும், 
திரை விழுந்தவிழியும்

நரை முடியை சாயம் பூசி, 
பேணிக் காத்தாலும், 
போனி ஆகாமல், தரை இறங்கியது என் அனுமதியின்று

விழித்திரையை விலக்க,
வந்தோம் மருத்துவரிடம்.
அரைமயக்கத்தில், விழி பிதுங்க திரை விலகியது

ஆனால் திரைக்கு கொடுத்த விலையோ. 
முழி பிதுங்க வைத்தது.

விலை உயர்ந்த விழித்திரையும், மறைந்தது என்னவோ மாயமாய்
இனி பார்வைக்கு இல்லை 
போர்வை

No comments:

Post a Comment

OUR GROUP SONGS