Monday, 5 October 2020

அட்டகாச அக்டோபர்


அட்டகாச அக்டோபர்  


அக்டோபர் மாதம் எங்களுக்கு அட்டகாச, அசத்தல் மாதமே,

எல்லோர் மனமும் களிக்க, 
பாச மலர்கள்,
மும்மூர்த்திகள்
கீர்த்தி பெற்று ஜொலிக்க , 
ஜனித்த மாதம்.

நேசம், பாசம் , எங்கள் வசம் வாசம் செய்ய , 

முன்னுரை இன்றி அச்சாரமாக
அக்டோபரில் அவதரித்த 
முத்தான மூன்று மலர்கள்.


முத்தான மும்மலர்களில் , முதலாம்  மலர்.

 *அக்டோபர் எட்டு : வின்னர் விட்டல்* 

எட்டுத்திக்கும் எங்கள் வாசம் என்று,
உலகத்தையே வலம் வந்த வள்ளலே

நில்லாது நித்தமும் (உலக) நிலம் அளந்தவரே , 

இன்று பெருங்குடியே
குடில் என்று குடித்தனம்.

வாய் சொல்லில் வீரரே ,  தங்கள் பாச வலையில், எங்களை வீழ்த்த,

உங்களுக்கு நங்கூரமாக  மனதில் கூடாரம் அமைத்து குதூகலிக்கின்றோம்.

என்றும் இதே புத்துணர்ச்சியான ,
பொலிவுடன் வாழ வாழ்த்துகிறோம்.

முத்தான மும்மலர்களில் ,  இரண்டாம்  மலர்.

 *அக்டோபர் பதிமூன்று. சாதனை சாமா* 
பசுமை துறையில் இளங்கலை பயின்ற , இளவலே

இலகுவாக ஜாவாவை வா வா என்று வசியபடுத்தினாய்.

உந்தன் கலகலப்பு  வார்த்தைகளில் மயங்கி , தாரை வார்த்தோம் எங்கள் இதயங்களை.

தந்தையின் ஆங்கில புலமையை தப்பாமல் தத்து எடுத்தாய்.

மடை திறந்த வெள்ளம், எம்மாத்திரம் உன் பேச்சுக்கு முன்னே , 

அதுவே சாட்சி உன் நண்பர்கள் வட்டம், அன்பர்களாகி, மாவட்டமான காட்சி.

என்றும் பசுமையான இளமையாக, வளமுடன் வாழ நல்வாழ்த்துகள்.

முத்தான 
மும்மலர்களில் , மூன்றாம் மலர்.

 *அக்டோபர் இருபது. லட்சிய லல்லி* 

பாச மலர்கள் அனைவரையும் பேச வைத்த பதுமையே ,

உனக்கு வானமே எல்லை

ஆயகலைகள் அறுபத்து நாலு
அத்தனையும் உன் கைகளில் ,
வளையல்லாக அடைக்கலம் ஆன வளைகாப்பு.

உன் எண்ணங்கள் வண்ணங்களாக ,
கைகள் மூலமாக அழகான அணிவகுப்பு.

உன் கணினி தரும், ஒலி, ஒளி 
உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
அறிவொளி

பாசங்களை பட்டை தீட்டி , வைரங்களாக மின்ன வைக்க, என்னே உன் வைராக்கியம்.

நீ "பாச மலர்களை" மனதில் நட்டு , நித்தமும் உறவு என்ற உரம் ஊட்டி
பூத்து குலுங்க வைத்த தமக்கையே

என்றென்றும் புதுப்பொலிவுடன் உன்
முகம் மலர , விழைகின்றோம் , வாழ்த்துகிறோம்.

   T. CHANDRASEKHARAN 

OUR GROUP SONGS