Monday, 5 October 2020

அட்டகாச அக்டோபர்


அட்டகாச அக்டோபர்  


அக்டோபர் மாதம் எங்களுக்கு அட்டகாச, அசத்தல் மாதமே,

எல்லோர் மனமும் களிக்க, 
பாச மலர்கள்,
மும்மூர்த்திகள்
கீர்த்தி பெற்று ஜொலிக்க , 
ஜனித்த மாதம்.

நேசம், பாசம் , எங்கள் வசம் வாசம் செய்ய , 

முன்னுரை இன்றி அச்சாரமாக
அக்டோபரில் அவதரித்த 
முத்தான மூன்று மலர்கள்.


முத்தான மும்மலர்களில் , முதலாம்  மலர்.

 *அக்டோபர் எட்டு : வின்னர் விட்டல்* 

எட்டுத்திக்கும் எங்கள் வாசம் என்று,
உலகத்தையே வலம் வந்த வள்ளலே

நில்லாது நித்தமும் (உலக) நிலம் அளந்தவரே , 

இன்று பெருங்குடியே
குடில் என்று குடித்தனம்.

வாய் சொல்லில் வீரரே ,  தங்கள் பாச வலையில், எங்களை வீழ்த்த,

உங்களுக்கு நங்கூரமாக  மனதில் கூடாரம் அமைத்து குதூகலிக்கின்றோம்.

என்றும் இதே புத்துணர்ச்சியான ,
பொலிவுடன் வாழ வாழ்த்துகிறோம்.

முத்தான மும்மலர்களில் ,  இரண்டாம்  மலர்.

 *அக்டோபர் பதிமூன்று. சாதனை சாமா* 
பசுமை துறையில் இளங்கலை பயின்ற , இளவலே

இலகுவாக ஜாவாவை வா வா என்று வசியபடுத்தினாய்.

உந்தன் கலகலப்பு  வார்த்தைகளில் மயங்கி , தாரை வார்த்தோம் எங்கள் இதயங்களை.

தந்தையின் ஆங்கில புலமையை தப்பாமல் தத்து எடுத்தாய்.

மடை திறந்த வெள்ளம், எம்மாத்திரம் உன் பேச்சுக்கு முன்னே , 

அதுவே சாட்சி உன் நண்பர்கள் வட்டம், அன்பர்களாகி, மாவட்டமான காட்சி.

என்றும் பசுமையான இளமையாக, வளமுடன் வாழ நல்வாழ்த்துகள்.

முத்தான 
மும்மலர்களில் , மூன்றாம் மலர்.

 *அக்டோபர் இருபது. லட்சிய லல்லி* 

பாச மலர்கள் அனைவரையும் பேச வைத்த பதுமையே ,

உனக்கு வானமே எல்லை

ஆயகலைகள் அறுபத்து நாலு
அத்தனையும் உன் கைகளில் ,
வளையல்லாக அடைக்கலம் ஆன வளைகாப்பு.

உன் எண்ணங்கள் வண்ணங்களாக ,
கைகள் மூலமாக அழகான அணிவகுப்பு.

உன் கணினி தரும், ஒலி, ஒளி 
உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
அறிவொளி

பாசங்களை பட்டை தீட்டி , வைரங்களாக மின்ன வைக்க, என்னே உன் வைராக்கியம்.

நீ "பாச மலர்களை" மனதில் நட்டு , நித்தமும் உறவு என்ற உரம் ஊட்டி
பூத்து குலுங்க வைத்த தமக்கையே

என்றென்றும் புதுப்பொலிவுடன் உன்
முகம் மலர , விழைகின்றோம் , வாழ்த்துகிறோம்.

   T. CHANDRASEKHARAN 

3 comments:

  1. அன்புள்ள அப்பாய்
    என்ன சொல்ல

    கண் கலங்க வைத்து விட்டாய் அண்ணா
    உன் இனிய வார்த்தைகள்
    மனதில் கனிய
    பாச பிணைப்பில் நாங்கள் நனைய
    அன்பினால் நம் அனைவரும் இணைய
    எப்படித்தான் உன்னால்
    முடிகிறதோ
    உன் கவிதையே பாச மலர்களுக்கு ஒரு கணையாழி யாய்
    கண் கலங்க வைத்து விட்டாய் அண்ணா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Floored by Abbai's mastery in poetic skills and affectionate words....

    அடி கள்ளி கூகுளே.. நான் 'அப்பாய்' என்று
    பதிவிட்டால் 'அன்பாய்' என்று திருத்துகிறாயே!!! உனக்கும் தெரிந்து விட்டதா எங்கள் வாச மலரின் பாச மழையை����

    ReplyDelete

OUR GROUP SONGS