எங்கள் அன்புத் தம்பி சாமா விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
குலதெய்வம் பெயரில் குதூகலமாக
வந்தாய் கடைக்குட்டியாக ,
கடலூரில் கள்ளத்தனம் பண்ணி
கட்டிவைக்கப் பட்டாய் - அது உன்
சுட்டித் தனத்தின் , முத்தாரம் அன்றோ
சென்னையில் சொன்ன பேச்சை கேட்டாய்
அது நீ சின்னவனாக இருந்தபோது
அம்பிலிக்கை ரயில்பயணங்களில் அமளிதுமளி
மதுரையிலோ உதராக உலா வந்தாய்
சிதம்பரத்தில் சுற்றி திரிந்தாலும் ,படிப்பில்
படிப்படியாக உயர்த்தாய்
வேலையில் விழுந்து விழுந்து உழைத்தாய்
இந்தராநகரில் இயந்தரமாய் இயங்கி
உயரம் தொட்டாய் , விரைவில் சிகரம் தொடுவாய்
நீ இருக்குமிடம் என்றும் கலகலப்பு ,
நீ எங்கள் வாழ்வின் நாடித்துடிப்பு
பிறந்த நாள் காணும் நீ , என்றும்
சீரும் சிறப்பாக வாழ , வாழ்த்துகிறோம்
இன்றும் என்றும் உன் பாசமலர்களாக
அது மட்டுமா?
FROM PAASAMALARGAL
இன்றும் தினந்தோறும் காலையில் மலருகிறாய்
மலர வைக்கிறாய்
பலபல வண்ண மலர்களுடன்!

No comments:
Post a Comment