Sunday, 6 April 2014

என் அன்பான மனைவிக்கு .....


   
                  
         என்னவளே , நினைவில் நின்னவளே 























பெற்றோர் ஆசிர்வாதத்தால் 
இருவர் மனமும் திருமணத்தில் இணைந்தது 
நம் முப்பத்திரண்டு வருட பந்தம்
நித்தம் குருகடாஷத்தில் நனைந்தது 

என் வாழ்வில் வந்த வசந்தமே , எந்நாளும் என் மனத்தில் உன் வாசமே 
கை பிடித்த நாளிலிருந்து, கடிகாரமாக ஓடுகின்றாய் என்னைச்  சுற்றி

நான் மாலை மாற்றியகையோடு பயனித்தேனே அம்லாய் க்கு 
நீயோ அம்பிளிக்கையே வாழ்க்கை என்று அடிஎடுத்து வைத்தாயே

பெற்றோர் ஆசையோடும், ஆசியோடும் உன்னை கரம்பற்றி வழிநடத்த
என்றென்றும்  நம் சுற்றம் போற்ற, புகுந்த வீட்டில் வலம் வருகிறாயே

பெற்றோரின் கரிசனத்தால், நிதர்சனமானது நமக்கு குருநாதரின் தரிசனம் 
அவரை சிக்கென பிடித்தாயே, அடுத்த  தலைமுறைக்கும்  வழிமொழிந்தாயே

பக்தியையும், பதிவிசான காரியத்தையும் கற்பித்த நம் அம்மாவுக்கு 
நித்தமும் நீ  வந்தனம் தந்து நினைக்கின்றாய் உனக்கு கிடைத்த வரமாக

சாட்டை இன்றி சுழல்கிறாய் நிரந்தரமான  பம்பரமாக, இந்த  
வீட்டைக்  கருத்தில்கொண்டு ஓயாமல் ஓடுகின்றாய் எந்திரமாக

தாரத்திலிருந்து பாட்டிவரை வெவ்வேறு வேடம்தரித்து ஆடுகின்றாய் 
நட்டுவாங்கம் தவிர்த்த உன்  நாட்டியம், வீட்டு நிர்வாகத்துக்கு கட்டாயம் 

எப்பிறவி எடுத்தாலும் நீயே தாரமாக வர
வரமாக வேண்டுகிறேன் !


                                          அன்புக்  கணவன்   அப்பாய் 

1 comment:

  1. Wow....simply superb Abbai
    kan kalingfying moment

    ReplyDelete

OUR GROUP SONGS