Can it ever be too late to give it a try, to give it a whirl, to take your best shot and see where it takes you? This blog is about everything ! And dedicated to our parents...
Thursday, 28 February 2013
Tuesday, 26 February 2013
வானவில்
வானவில்
வண்ணவண்ண பாவாடை உடுத்தி , வில்லாக வளைந்து
வா வா என்று அழைத்தாயே
உன் பெயர் தான் வானவில்லோ
தடதட வென்று இடி முழக்கத்தோடு ஓடி வந்தேன்
என் பெயர் தான் கார்மேகம்
என் ஆசை அனைத்தும் கொட்டித் தீர்த்தேன் மழை நீராக
என் ஆசை நீரில் உன் வண்ணப் பாவாடை சாயம் வெளுத்து
நீ ஓடி ஒளிந்தாய நாணம் கொண்டு !
எந்தோ என் அறியாமை !
உறுத்தல் காரணமாக அழுதேன் தூரலாக.
கொட்டித் தீர்த்த என்னை , விரட்டி விட்டான்
வெளிச்சமாக வந்த வெயில் !!
---அப்பாய்
---அப்பாய்
Saturday, 23 February 2013
கழுகு எழுதும் கவிதை!
கழுகு எழுதும் கவிதை!
என்றுமே குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
எங்களுக்கு (திருகழி)குன்றதிலே இன்று ஏது ஊட்டம்
எங்கள் தம்பிகளுக்கு வேடந்தாங்கல் சரணாலயம்
எங்கள் அண்ணன் கருடனுக்கு இருப்பதோ பல ஆலயம்
ஆகாயமே எங்களுக்கு என்றும் சரணாலயம்
விமானம் போல எங்களைப் படைத்தான்
இருப்போம் என்றுமே உயரத்திலே
குரங்குகளைப் போல் உங்களைப் படைத்தான்
தாவி இருப்பீர்கள் நீங்கா துயரத்திலே
நீங்கள் கழுகுப் பார்வை பார்த்தால் மட்டும் போறாது !
அழகப் பழக வாழுங்கள் என்றும் மாறாது
இப்படிக்கு உங்கள் கழுகு !
----அப்பாய்
Thursday, 21 February 2013
குரு
குரு
அர்பணித்தேன் கவிதை இதை நம் குரு விற்கே
எம் தாய் தந்தை கற்பித்த அருள் வாக்கே
நாங்கள் கண் கூடாக பார்த்த நம் சத்குரு
நீங்கள் கண்கோடி கொண்டு காணும் குரு
நாங்கள் மனம் உருகி லயித்த குரு
நீங்கள் மனம் பதித்து மருகும் குரு
நாங்கள் எந்நாளும் பூஜித்த குரு
நீங்கள் பக்தியோடு பார்க்கும் குரு
நாங்கள் கண்ட கண்கண்ட தெய்வம் நம் குரு
நீங்கள் கண்ணும் கருத்துமாக காண வேண்டும் நம் குரு
நம் எல்லோர் வீட்டிலும் வீற்றிருக்கும் நம் குரு
எல்லோர்க்கும் நன்மை தரும் சத்குரு
நாங்கள் கெட்டியாய் பிடித்த நம் குரு
நீங்கள் கேட்டதை அள்ளித்தரும் சத்குரு
நாங்கள் செய்த தவம்
குரு கட்டளையாய் கொடுத்த வரம்
நீங்கள் தடையின்றி
ஜகம் இருக்கும் வரை காக்கும் வரம்
இந்த குரு வரம் அன்று நம் குருவே
எங்களுக்கு சொன்ன மா வரம் அன்றோ
விண்ணுலகிலிருந்து நாங்கள்
நம் குருவை த்யானித்து
மண்ணுலகில் உங்களை ஆசிர்வதிப்போம்
-அப்பாய்
Wednesday, 20 February 2013
கவிதை மழை
1. 24 மணி நேரம்
எண்ணி துணிக கர்மம் என்று நினைத்து ,
24 மணி நேரத்தை கவிதையாக்கத் துணிந்தால்
நேரம் விரயமா அல்லது வரும் கவிதை கருமமா !
தெரியவில்லை !
"துணிந்தவனுக்கு தூக்கு கயிறு தூளிக்கயிறு" என முனைவோம்
மணிக்கு இருப்பதோ அற்புத நிமிடம் அற்புத வினாடி
காலகாலமாக ஓடி காலத்தை காட்டும் கண்ணாடி
மனிதனுக்கோ 24 மணி நேரம்
5 வரை தாய் பாசம்
15 வரை நண்பர்கள் சகவாசம்
25 வரை காதல் வசப்படனும்
40 வரை நாலா பக்கமும் ஓடனும்
60 வரை நரை தெரித்தும் நுரை தள்ள உழைக்கணும்
60 க்கு மேல் மனித நேயம் வந்து
சுற்றி உள்ள உற்றார் நம்மை
மதிப்பார்களா மிதிப்பார்களா என்று ஏங்கி
தெய்வ அழைப்புக்கு காத்திருந்து
24 மணி நேரம் நரகமா சொர்கமா
என்று மென்னி முழுங்கி நகர்த்துவோம் !
-----அப்பாய்
Subscribe to:
Comments (Atom)
-
* கொரோனா * வருடம் பிறந்தது, இருபதுஇருபது என்று நாங்கள் இருப்புதும், இறப்பதும் உன் கையில் என்றானது உலகையே சின்னாபின்னமாக்க , அவத...
-
What a fun it was to gather voices and create a music challenge with all our family members! Enjoy this here





.jpg)
