Wednesday, 20 February 2013

கவிதை மழை

                                 1.  24 மணி நேரம் 








 எண்ணி துணிக கர்மம் என்று நினைத்து ,
 24 மணி நேரத்தை கவிதையாக்கத்  துணிந்தால் 
  
நேரம்  விரயமா அல்லது வரும் கவிதை கருமமா !
தெரியவில்லை !
"துணிந்தவனுக்கு தூக்கு கயிறு தூளிக்கயிறு" என  முனைவோம் 

மணிக்கு இருப்பதோ அற்புத நிமிடம் அற்புத வினாடி 
காலகாலமாக ஓடி காலத்தை காட்டும் கண்ணாடி 

மனிதனுக்கோ 24 மணி நேரம் 

5 வரை தாய் பாசம் 
15 வரை நண்பர்கள் சகவாசம் 

25 வரை காதல் வசப்படனும் 
40 வரை  நாலா பக்கமும் ஓடனும் 

60 வரை  நரை தெரித்தும் நுரை தள்ள உழைக்கணும் 

60 க்கு மேல் மனித நேயம் வந்து
சுற்றி உள்ள உற்றார்  நம்மை
மதிப்பார்களா மிதிப்பார்களா என்று ஏங்கி 
தெய்வ அழைப்புக்கு  காத்திருந்து 

24 மணி நேரம் நரகமா  சொர்கமா 
என்று மென்னி முழுங்கி நகர்த்துவோம் !


 -----அப்பாய் 

1 comment:

  1. Great start Abbai.Simple at the same tome honest
    Keep them coming

    ReplyDelete

OUR GROUP SONGS