Thursday, 21 February 2013

குரு

              குரு 



     அர்பணித்தேன்  கவிதை இதை நம் குரு விற்கே 
    எம் தாய் தந்தை கற்பித்த அருள் வாக்கே 




நாங்கள் கண் கூடாக பார்த்த நம் சத்குரு 
நீங்கள் கண்கோடி கொண்டு காணும் குரு  

நாங்கள் மனம் உருகி லயித்த குரு 
நீங்கள் மனம் பதித்து மருகும் குரு 

நாங்கள் எந்நாளும் பூஜித்த குரு 
நீங்கள் பக்தியோடு பார்க்கும் குரு 

நாங்கள் கண்ட கண்கண்ட தெய்வம் நம் குரு 
   நீங்கள் கண்ணும் கருத்துமாக காண வேண்டும் நம் குரு 

நம் எல்லோர் வீட்டிலும் வீற்றிருக்கும் நம் குரு 
எல்லோர்க்கும் நன்மை தரும் சத்குரு 

நாங்கள் கெட்டியாய் பிடித்த நம் குரு 
நீங்கள் கேட்டதை அள்ளித்தரும் சத்குரு

நாங்கள் செய்த தவம்
குரு கட்டளையாய் கொடுத்த வரம் 

நீங்கள்  தடையின்றி
ஜகம் இருக்கும் வரை காக்கும் வரம் 

இந்த குரு வரம் அன்று நம் குருவே 
எங்களுக்கு சொன்ன மா வரம் அன்றோ  

விண்ணுலகிலிருந்து நாங்கள்
நம் குருவை த்யானித்து 
மண்ணுலகில் உங்களை ஆசிர்வதிப்போம் 

                           -அப்பாய் 

                 

2 comments:

  1. Hi Abbay
    Very good. I think your kavidhais could be published as a book too !
    keep writing.

    ReplyDelete
  2. I showed your kavidais to jagan also....he was also very much appreciating......good...keep kavinggg

    ReplyDelete

OUR GROUP SONGS