கழுகு எழுதும் கவிதை!
என்றுமே குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
எங்களுக்கு (திருகழி)குன்றதிலே இன்று ஏது ஊட்டம்
எங்கள் தம்பிகளுக்கு வேடந்தாங்கல் சரணாலயம்
எங்கள் அண்ணன் கருடனுக்கு இருப்பதோ பல ஆலயம்
ஆகாயமே எங்களுக்கு என்றும் சரணாலயம்
விமானம் போல எங்களைப் படைத்தான்
இருப்போம் என்றுமே உயரத்திலே
குரங்குகளைப் போல் உங்களைப் படைத்தான்
தாவி இருப்பீர்கள் நீங்கா துயரத்திலே
நீங்கள் கழுகுப் பார்வை பார்த்தால் மட்டும் போறாது !
அழகப் பழக வாழுங்கள் என்றும் மாறாது
இப்படிக்கு உங்கள் கழுகு !

No comments:
Post a Comment