Wednesday, 17 December 2014

HAPPEEE BIRTHDAY KARTHI !










பதினெட்டில் பிறந்து 
என்றும்  பதினெட்டாய் தோன்றும் 

என் அருமை மருமானே 

பதினெட்டு படியேறி 
ஐயப்பனை காணும் உன் 
பதினெட்டு பெருமையை 
என் பதிவேட்டில் தருகிறேன் பார் !


அடக்கம், அமைதி,  அன்பு,  அறிவு 
கனிவு, குறும்பு, 
தளர்விலா உழைப்பு,
பணிவு, பண்பு, படிப்பு,
துணிவு,  துடிப்பு , துடுக்கு, மிடுக்கு 
உன் தோற்றமோ  எடுப்பு

புன்னகையே  உன் நகை 

​நீ ​சிரித்தால் இடி !​
பேசினாலோ கடி !   
​ 
(ஹி ஹி ​ஹி ஹி 
​)​

காந்தமாய் இருக்கும் நீ ரஜினிகாந்திடம் 
மயங்குவதேனோ 

 
உன் அருமை பெற்றோருக்கு 
பெருமை சேர்த்த 
 உன் பெருமையும் திறமையும் பாட
 
 பல நூறு ஆண்டு நீ 
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ 
எங்கள் இனிய
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 



--------பாசமலர்களும் மொட்டுக்களும் 

Lets Dance and celebrate !


Tuesday, 7 October 2014

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

                                   வாழ்த்துக்கள்



விட்டல் இருக்கும் இடத்தில கிட்டும் விண்ணை எட்டும் புத்துனுர்ச்சி


கேமரூனில் கண்டோம், என்றும் நீங்கள் கலகலப்பு 

பாசகுடும்பதில் ஒளி குடுக்கும்  எங்கள் மத்தாப்பு


வேலை நிமித்தம் வெவ்வேறு தேசம் வாசமானதே 

வேளை வந்தவுடன் எம்மிடம் வர எம்னைனேநிசமானதே


மாங்கல்யம் தரித்தவுடன் , "மங்கல்யான்" தூரத்திற்கு பயனித்தீர்கள் 

துலைபேசி வாயிலாக ,"செவ்வாய்" மலர்ந்து பாச மழை பொழிந்தீர்கள்


"திரி"யும் "தீ"யுமாக ஜனித்தார்கள் இரு கண்களாக பெண்கள் 

பெயருக்கு ஏற்ப இனை்ந்து ஜொலித்தார்கள் நம் குடும்ப விளக்காக 

பாசமும் நேசமும் கொண்டு நம் எல்லோரையும் பிணைத்தார்கள் 'பிவிகாலாக'


உங்கள் சொல்லில்லேயே  வாழ்த்த விழைகின்றோமே 

என்றண்டும் "வாழ்க வளமுடன்" என்று 

                          பாசமலர்கள் 

Monday, 1 September 2014

Happy Birthday to OUR DEAR LALITHA

லலிதா லலிதா

நீ  வந்தாய்  இனிதாய்




மகளாய்  மருமகளாய்
தங்கையாய் தமக்கையாய்
மனைவியாய் ......
தாயாய்  பெரிய தாயாய்
சித்தியாய் ஓரகத்தியாய்
மன்னியாய்  மாணவியாய்
அத்தையாய்
மாமியாய் மாமியாராய்
பாட்டியாய்

தோழியாய்
எஜமாநியாய்

ஆக
       
 உறவுகள் பலப்பல ஆனாலும்
 எங்கள் மத்தியில்

என்றென்றும்

நீ  ஒரு

கதாநாயகியே 

இருக்க வேணும்   நீ   எப்போதும்

ஜாலியாய் 

உன் வாழ்வில்   என்றென்றும்
மகிழ்ச்சி  பொங்கிட


பிறந்த நாள் வாழ்த்துக்கள்


பாசமலர்கள்

Monday, 4 August 2014

அப்பாயின் கவிதை Part 1


தெப்பக்குளத்து தாமரை சூரியனை பார்த்து மலர்ந்தது.
தொப்பமாக வேர்த்து நாம் சூரியனால் உலர்ந்தோம்.

அவர் வ௫வாரோ என்று எதிர் பார்த்த சாமா சாமானியன் இல்லை எம்டண் அவர் எம்9 வருவாரோ நாளை

பார்க்க பரவசமான பட்டாம் பூச்சிக்கு மட்டும் இல்லை நாஙகள். பாடும் தும்பியும் நம்பி வரலாம்.

ரோஜோ கூட்டம்.ஜோரா இருக்கு

பல் விளக்கி வந்தால் புல்வெளி புத்துணர்ச்சி தரும் மகிழ்ச்சி  இன்றைய நாள் எழச்சியே
ஆடி வாழ்த்துக்கள் தேடி வருகுது,
பாச உள்ளங்களில் நாடி விதைக்க,
பூத்து குலுங்க வைக்க நீங்கா நினைவுகளாக
என்றெண்டும் இரூப்போம் பாசமலர்களாக.

சாமா ஆடிக்கு OD போய்ட்டாயா, ஆளை கானும் நேத்திக்கு


நீல வானில் நிலை கொண்ட நட்சத்திரம்,
நிலத்தில் நடை பழகினால், நில நீரும்,
நீலம் ஆனதே  நட்சத்திரமோட நட்புக்காக
இன்று செவ்வாய் மலர்ந்ததை,
உன் சொல் வாயிலாக சொல்லாமல்,
செவ்விழதுகளால் செவ்வனை செய்தாய், உனக்கு வணக்கங்கள் பல

பகலவன் வரவால் இருவுகள் இறந்து பல நேரம் ஆனதே!

நம் முன்னோர்களுக்கு, தர்ப்பணத்தை, அர்பணம் செய் மெத்தனமாக இல்லாமல்

காலை வணங்கி, காலை வணக்கம் சொல்ல வந்த அலைகள். மனதை கொள்ளை கொல்ல வந்த மேகங்கள். அத்தனையையும் வெளிச்சம் போட்டு காட்டிய கதிரவன். யாருக்கு சொல்வேன் முதல் வணக்கம்!

வண்ணங்கள் ஆயிரம் அள்ளி தெளிக்கும் வானம் போல்,  எண்ணங்கள் ஆயிரம் நம்மை துள்ளி துரொத்தாது இருக்க, இன்றைய குரு வாரில், குரு வரம் வேண்டோவோம்.

 கவி நயத்துடன் பின்னி எடுப்பதால் நீயும் பின் லேடனே
 வாசனையே இல்லையே. காட்டு(cattu) பூவோ
பல் விளக்கி வந்தால் புல்வெளி புத்துணர்ச்சி தரும் மகிழ்ச்சி  இன்றைய நாள் எழச்சியே
[03/07 3:22 AM] Chama: கவி நயத்துடன் பின்னி எடுப்பதால் நீயும் பின் லேடனே
பட்டாம்பூச்சியே, பாடி திறீந்தாய தேன் வேண்டி,
(ம)கரம் தட்டி தென்டறல் தாலலாட்ட தருவித்தோம்  உன்னை,
அமுதம் உண்ட உவகையில் எங்களை நகல்
எடுத்து இதயத்தில் வைத்தாயே,  நீ வாழ்க
தெப்பக்குளத்து தாமரை சூரியனை பார்த்து மலர்ந்தது.
தொப்பமாக வேர்த்து நாம் சூரியனால் உலர்ந்தோம்.

அன்பால் வந்த மாப்பிள்ளை க்கு ஆடிபால் கொடுத்தாயா
என் தங்கை தந்த கவிதை
என் மனதை ஈர்த்த பாச மழை

அதில் நனைந்தேன் நன்றியுடன்
இ௫ப்பேன் நீங்கா நினைவுடன்


Wednesday, 18 June 2014

A VERY HAPPY BIRTHDAY TO ABBAY!



எங்களுக்கு என்றென்றும்
உருதுணையாய்
அறுமறையாய் 
வழிகாட்டி வழிநடத்தும் அப்பாய்,

சிறுவயதில் நீ இருப்பாய்
அமைதியாய்
ஆனாலும் செயல்பட்டாய்
அருமையாய் பொறுமையாய்

அம்மா, அப்பாக்கு
சலிக்காமல், சளைக்காமல்  
அத்தனையும் செய்து களிப்புற்றாய்

பிடித்தாய் W S ஐ கெட்டியாய்
அது உயர
நீ உழைத்தாய் அயராமல் துயராமல்

நல்ல வேளை!
பிறந்த நாளையும் WS ல்
மறந்து போகாமல்
வெளிநடந்தாயே!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனி வரும் உன் மூச்சில்
இருக்கட்டும்
களிப்பும் கொண்டாட்டமும்
நிறைவும் நிம்மதியும்! 


பாசமலரகள்

Wednesday, 28 May 2014

HAPPY WEDDING DAY TO OUR DEAR CHAMA & MALLIKA !!




இருக்கும் இடத்திலேயே (அண்ணாநகர்), இல்லாளை கண்டாயே 
தங்கமான தாரகை , பார்வதி மண்டபத்தில் பாரியாள் ஆனாளே 
ஒரே மகளாக வளர்ந்து ,நம் குடும்பத்தில் மருமகளாக வந்தது வரமே 
திருமணத்தில் இணைந்த மல்லிகா நம் வளமான உறவுக்கு உரமே 

நம் கலகலப்பு சாமாவுடன் கைகோர்த்து நிலம் பார்த்து வலம் வந்தவளே 
பெற்றோர் ஆசியுடன் குடும்பத்தில் பாந்தமான பந்தமாக நிலைகொண்டாயே 

வங்கியில் சேர்ந்து இங்கு எங்கனாதபடி  எல்லா மாநிலமும் மாறி 
அந்தமானில் அடைக்கலமாகி ,கர்நாடகாவில் கயண்டுகொண்டாயே 

எங்களுடனே  இருக்க சென்னையில் நின்னாயே ,நிலைத்தாயே 
நம் சாமா இருக்குமிடம் என்றேன்றும்  கொப்பளிக்கும் குதூகலமாக 
எந்த சூழ்நிலையிலும் கைகுடுக்கும் மல்லிகா தருவது மனநிறைவு 

நம் குடும்பத்தின் செல்லபிள்ளையாக வந்தானே விக்னேஷ் 
நம் அனைவரது பாசபினைப்பிற்கு இணைப்பாக இருப்பவனே 

இருபத்தியேழு வருட மணநாள், எந்நாளும் நன்னாலானதே 
வரும் நாள்கள் அனைத்தும்  மனநிறைவாக வாழ வாழ்த்துக்கள் 

                                                பாசமலர்கள் 







Sunday, 6 April 2014

HAPPY ANNIVERSARY - From Chama



HAPPY ANNIVERSARY



If there is a family wikipedia this is what it would say when you do a  search on Abbai Anna & Manni's usp (unique selling proposition).


1. Unbridled affection (vanjanai illaa) without expectations.

2. Genuine concern when near & dears emotional / physical quotient is  on the downside.

3. Compassion in thoughts & deeds.

4. Ability to motivate and make us believe in ourselves.

5. Not lamenting for siblings' laid back approach but donning the cross of family obligations without malice.

5. Ability to say YES when a "no" would make life easier to them .

In short you both have imbibed the goodness of appa, amma and mannimma.

Wishing you a very happy anniversary and many many happy returns.
We are blessed to have u as our anna-
manni.

By  Chama


என் அன்பான மனைவிக்கு .....


   
                  
         என்னவளே , நினைவில் நின்னவளே 























பெற்றோர் ஆசிர்வாதத்தால் 
இருவர் மனமும் திருமணத்தில் இணைந்தது 
நம் முப்பத்திரண்டு வருட பந்தம்
நித்தம் குருகடாஷத்தில் நனைந்தது 

என் வாழ்வில் வந்த வசந்தமே , எந்நாளும் என் மனத்தில் உன் வாசமே 
கை பிடித்த நாளிலிருந்து, கடிகாரமாக ஓடுகின்றாய் என்னைச்  சுற்றி

நான் மாலை மாற்றியகையோடு பயனித்தேனே அம்லாய் க்கு 
நீயோ அம்பிளிக்கையே வாழ்க்கை என்று அடிஎடுத்து வைத்தாயே

பெற்றோர் ஆசையோடும், ஆசியோடும் உன்னை கரம்பற்றி வழிநடத்த
என்றென்றும்  நம் சுற்றம் போற்ற, புகுந்த வீட்டில் வலம் வருகிறாயே

பெற்றோரின் கரிசனத்தால், நிதர்சனமானது நமக்கு குருநாதரின் தரிசனம் 
அவரை சிக்கென பிடித்தாயே, அடுத்த  தலைமுறைக்கும்  வழிமொழிந்தாயே

பக்தியையும், பதிவிசான காரியத்தையும் கற்பித்த நம் அம்மாவுக்கு 
நித்தமும் நீ  வந்தனம் தந்து நினைக்கின்றாய் உனக்கு கிடைத்த வரமாக

சாட்டை இன்றி சுழல்கிறாய் நிரந்தரமான  பம்பரமாக, இந்த  
வீட்டைக்  கருத்தில்கொண்டு ஓயாமல் ஓடுகின்றாய் எந்திரமாக

தாரத்திலிருந்து பாட்டிவரை வெவ்வேறு வேடம்தரித்து ஆடுகின்றாய் 
நட்டுவாங்கம் தவிர்த்த உன்  நாட்டியம், வீட்டு நிர்வாகத்துக்கு கட்டாயம் 

எப்பிறவி எடுத்தாலும் நீயே தாரமாக வர
வரமாக வேண்டுகிறேன் !


                                          அன்புக்  கணவன்   அப்பாய் 

Monday, 3 February 2014

HAPPY BIRTHDAY GURU !!

குரு பிரஸாதம்  !!!!




இன்று புவியில் பூத்த எங்கள் அருமை பாசமலரே 
அன்று கரு உருவிலேயே குரு ஆசிர்வதித்தாரே 
அதனாலேயே குரு பிரஸாதம் ஆனாயே !
எல்லோர்க்கும் உதவும் உயர்ந்த உள்ளம் உள்ளதாலே 
எங்களுள் உடலாலும் உயர்ந்தவனாய் உள்ளாயே
"பழம் நழுவி பாலில் விழுந்தது போலே" - என்பது மகிழ்ச்சிக்கு 
நீ அன்பால் பழம் கழுவி அழகாக தருவது - அன்றாட நிகழ்ச்சியே 
கடலூரில் நீ கைவிட்ட கடைக்குட்டி, இன்றும் 
உன்னை கைகாட்டி,கைகொட்டி குட்டுகிறானே தினமும்
மௌனமே உன் மொழி என்று பழகிவிட்டாய் 
அதுவே உன் பலமாகவும்  ஆக்கிவிட்டாய்
பிள்ளைகளால் எல்லையில்லா பெருமைபெறவும் 
எங்கள் மௌனகுரு என்றும் யௌவ்வனமாக இருக்கவும் 


                                                           வாழ்த்தும்  பாசமலர்கள் 




ஒ கே ஓ கே 

ரொம்ப அலட்டிக்காதே 
எனக்கு தெரியும் நீ அடித்த லூட்டி!!
மௌனமாய் இருப்பாய் உன் வாயைப் பூட்டி 
ஆனாலும் சாதிப்பதோ வானத்தை  எட்டி !!
 
 பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Wednesday, 22 January 2014

HAPPY BIRTHDAY, DEAR MALLIKAA !







   Pl excuse for spelling mistakes... Im unable to correct them at present



வாழ்த்துகிறோம் 

மல்லிகையின் வாசம் ஒருநாள்தான் வீசும் 
மல்லிகாவின், பாசமும் நேசமும எந்நாளும் நம் வசம் 
பிறந்த வீட்டிலோ வலம்வந்தாய், மகா ராணியாக 
புகுந்த வீட்டிலோ எல்லார் முகம்மலர, மருமகளாக 
உன் மன்னிக்கள் என்றைக்கும் ஒரு கைகேட்டால் 
ஒடுஓடிவந்து உதவிக்கரம் கொடுப்பாய் நம்பிக்கையாய்
குழந்தைகள் என்றாலே உனக்கு ஸ்பெஷல்தான் 
அதனால்தானோ ஸ்பெஷல் குழந்தைகளை கொண்டாடுகாறாய்
சகஜமாக பேசும் உன்னவர், உன்பேச்சுக்கு பதில் இல்லை என்பாய் 
அது உன்பேச்சக்கு மறுபேச்சு இல்லை என்பதாலே !

விக்னேஷ்வரர் முதல்கடவுள் என்பது எக்காலமும் உண்மை   
நம் விக்னேஷ் நாம் பெருமைகொள்ள வருவான் என்பது திண்மை                                                                                   

இன்று பிறந்தநாள் காணும் மல்லிகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

                                                               பாசமலர்கள் 

OUR GROUP SONGS