Wednesday, 25 December 2013

                                      வாழ்த்துக்கள்  SAVITHA !


சாத்விகத்தின் மறு பதிப்பு சவிதாதனன்றோ
எந்நாளும் புன்னகை, அதுவே உன் நகை,
                                         அதற்க்கு ஏது ஈடு இணை

எல்லார் நலம் காக்க , நாளும் தருவாய் நற்செய்தி
அதை தள்ளி தவிர்த்தாலும், தவறாமல்  தந்திடுவாய்

சுற்றமும் நட்பும் தொலைதூரமானாலும், துலையாமல்
இருக்க துலைபேசியில் துவளாமல் அலவளுவாய்

குரு மௌனமே உருவா  இருந்தாலும், தவணை முறையில்
வார்த்தை வாங்கும் உன் திறமை , பொறுமையின் இமையம்

அம்புலி சோறு ஊட்டும்போதே , அமெரிக்காவை போய் சேரு
என்று நீ நித்தம் நினைத்ததை ,நிதர்சனமாக்கினான் உன் மகன்
ஆதலால், சவிதா  சாதித்தா (ள்) என்பதே சரி

கோபம் உள்ள  இடத்தில் குணம் உண்டு  - பழமொழி
கோபமே வராத உன்னை குணவதி என்பதே - நிஜமொழி

எங்கள் மனம் கவர்ந்த உனுக்கு, பெறந்தனால் வாழ்த்துக்கள்.

                                                                      பாசமலர்கள்

Friday, 1 November 2013

                                           காசி யாத்ரா 

Saturday, 19 October 2013

BIRTHDAY WISHES

பாசகரங்களால் வாழ்த்துவோம் 

பாசமலர்களை, பூத்து குலங்க வைத்த பூவைக்கு 
அறுபதாம் , அது பொய்த்தது ,உன் தோற்றம் கண்டு 
நடப்பது நாற்பது  என்பதே நம்பும்படியானது .
மலர்களின் வாசம் நித்தம் மறையும் நிதர்சனம்  
ஆனால் , நீ பாச நூலை கொண்டு தொடுத்த பாசமலர்கள் 
எந்நாளும் எல்லோரையும் வசபடுத்தும் வரப்ரசாதம்
தந்தையை தொடர்ந்து வைத்தியராக மனதை வைத்தாய் 
அசராமல் அறிவியல் படித்து பல பரிசுகளை பெற்றாய் 
உன் எண்ணங்களுக்கு  கை வித்தையால்  உயிர் குடுத்தாய்
விதவிதமான கலைகள் உன் கையில் - அது 
சித்திரமோ ,சிந்தனையை தூண்டும் கம்புயுடரோ 
நித்திரையுளும் உன்னால் முடியும் நிஜம்
விட்டலே  உன் விடியல் என்று அவருக்கு தலைவணங்கி 
தாரமானது ,நம் பெற்றோர் உனக்கு  தந்த வரமானதே
இரு கண்களான ,பெண்களை பெற்று, இமை போல் காக்க 
நாடு விட்டு நாடு போய் நல்வழிபடுத்துகறாய்

வாழ்க்கை பாதையில் ஓடுகறாய் - தாரமாய் ,தாயாய்,சகோதரியாய் 
உன் பாத்திரத்தை பவித்தரமாக திறம்பட செய்து 
எல்லார் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளாய் 
நம் பெற்றோரிடம்  தவறாமல் நித்தமும் அளவளாவியது  
அவர்களுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது 
அதுவே அம்மா உன்னிடம் நேரிடியாக விடை பெற வித்திட்டுது 

எங்களை  பாசவலையில் வீழ்த்திய எங்கள்  பாசமலர் 
இன்று மலர்ந்த நாள் - இனி வரும் எந்நாளும் நன்னாளாக இருக்க 
இறைவனையும் , நம் பெற்றோரையும் வேண்டுகிறோம் , வணக்கிறோம்
எங்கள் லல்லி என்றும் வாடா மல்லி
                                                                              பாசமலர்கள்

Sunday, 13 October 2013

HAPPAY BIRTHDAY DEAR CHAMA

                      எங்கள் அன்புத்  தம்பி  சாமா விற்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் 



 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
                                                  




                                                  குலதெய்வம் பெயரில் குதூகலமாக

வந்தாய் கடைக்குட்டியாக ,


கடலூரில் கள்ளத்தனம் பண்ணி 

கட்டிவைக்கப் பட்டாய் - அது உன் 

சுட்டித்  தனத்தின் , முத்தாரம் அன்றோ 



சென்னையில் சொன்ன பேச்சை கேட்டாய் 

அது நீ சின்னவனாக இருந்தபோது 



அம்பிலிக்கை ரயில்பயணங்களில் அமளிதுமளி 

மதுரையிலோ உதராக உலா வந்தாய் 

சிதம்பரத்தில் சுற்றி திரிந்தாலும் ,படிப்பில்

படிப்படியாக உயர்த்தாய் 

வேலையில் விழுந்து விழுந்து உழைத்தாய்

இந்தராநகரில் இயந்தரமாய் இயங்கி

உயரம் தொட்டாய் , விரைவில் சிகரம் தொடுவாய் 

நீ இருக்குமிடம் என்றும் கலகலப்பு ,

நீ எங்கள் வாழ்வின் நாடித்துடிப்பு 

பிறந்த நாள்   காணும் நீ , என்றும்

சீரும் சிறப்பாக வாழ , வாழ்த்துகிறோம்

இன்றும் என்றும் உன் பாசமலர்களாக



அது மட்டுமா?

                                           இன்றும் தினந்தோறும் காலையில்  மலருகிறாய்

                                                                  மலர வைக்கிறாய்

                                                          பலபல  வண்ண மலர்களுடன்! 




                                                 FROM   PAASAMALARGAL








Tuesday, 30 July 2013

அம்மா













                                                                      அம்மா 


என் எண்ணமெல்லாம் என்றென்றும் நிறைத்துவிட்டு
இன்று நீ காணாமல் போய் விட்டாய்.....
இல்லை இல்லை , இன்றும் என் ஒவ்வொரு நினைவிலும் நீ இருக்கிறாய்

பசுமையாக எங்களுக்கு உரு துணையாய் நீ இருந்தாய்
செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் உன் முத்திரை
ஈடில்லா உன் பக்தியும்
அளவில்லா உன் பணிகளும்
தளறாத உன் உழைப்பும்
சலியாத உன் மனமும்
என்றும் தவறாத உன் கணிப்பும்
கூரான உன் புத்தியும் ......
இன்னும் எத்தனையோ ....
உருவுடன் நீ இங்கு இல்லாவிட்டாலும்
எங்கள் கருத்தினில் இருந்து
என்றும் எங்களை வழி நடத்துவாயாக.....



                                                 அம்மா





 


பன்னிரெண்டு வயதில் பயந்து பயந்து ,
பாவாடையில், புக்காத்தில் பாதம் பதித்தாய்
பாசத்தை சேர்த்துவைத்து எங்களுக்கு
பகிர்ந்து கொடுப்பதற்காகவே !

உன்னைக்  கொண்டவர், கண் காணா  இடத்தில்,
நீயோ கண்களில் கனவுகளோடு  காத்திருந்தாய்
"தியாகு" என்ற பெயரில் தியாகத்தை எங்களுக்கு
தங்கு தடையின்றி அன்றே தொடங்கிவிட்டாயே

மச்சினரும் நாத்தனாரும் நாளும் மெச்ச
மெட்டி ஒலி  எட்டாத ஒலியாக, ஓடி உழைத்தாயே
அதுவே உன்னை எல்லாரும் சித்தி , சித்தி
என்று சுத்தி வரவைத்ததே

பூத்த மலர்கள் ஐந்து ஆனாலும், ஒரு மலரை
நெஞ்சில் வைத்தாய் , மற்ற நால்வரையும்
நல்லவராக்க நாளும் நினைத்து தேய்ந்தாயே

ஸைபர் ஸ்வாமியையே, நித்தமும் வலம் வந்தாயே
எங்களுக்காக புண்ணியத்தை விதையாக விதைத்து
அதன் அறுவடையை எங்களுக்கு அற்பனித்தாயே

"மாமாவே" நமக்கு எல்லாம் என்பதில் உறுதியாக இருக்க,
எங்களுக்கு ஊட்டினாயே ஓயாமல் போதனை

முனிவர்கள் தவமிருக்கலாம், ஆனால் நீயோ
முடியாவிட்டாலும் எங்களுக்காக முக்காலமும் பூஜையிலிருந்தாய்

தந்திரமாக சுதந்திர தினத்தை தேர்ந்தெடுத்தாய்
"மாமா" மந்திரத்தை உச்சரித்து
அவரை நச்சரித்து
அவரது பாதாரவிந்தை சென்று அடைந்தாயே


எங்களை எந்திரமாக ஆக்க எப்படி மனம் வந்தது !

என்றும் உன் நினைவோடு -

பாசமலர்கள்

அம்மா வின் மனம் நெகிழ வைக்கும் பல விடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்



​அம்மாவின் பக்தி ​



அம்மா சொல்லும் ரெசிப்பி

அம்மாவின் கைவண்ணம்  


Advice !!



 



Tuesday, 30 April 2013


 THE OTHER SIDE OF LIFE !


  In the midst of everyday routine most of us are like the  piece of paper caught in  a wheel of a cycle ... swirling along with it . Though you might want to get out  its that not that easy  But I realize how very essential to just get away from that swirl and try something different !
I had this great opportunity of  being in Koh Samui a lovely serene island in Thailand recently.
The very first moment when we arrived at the resort we had booked , was absolutely BREATHTAKING !  It was too good and beautiful to be true !  A vast blue, just beautiful blue sea view from the balcony bordered with charming coconut trees and other greeneries all around.....




The thought that we would be spending a month in this exquisitely stunning place was intoxicating !
Such a lovely place is chosen for the Yoga center  where yoga retreats as well as yoga teacher training
has been going on for many years ..
 Let me describe the yoga sessions and the lovely time we had  in my next session !....



Monday, 8 April 2013

வெய்யில் SUN

 வெய்யில்

நிழலின் அருமை வெய்யிலில் இருந்து வந்தால் தெரியும்
உன் அருமை நாங்கள் சொன்னால் தான் புரியும்

பகலும் இரவும் உன் கையில்
நீ நிமிர்ந்தால் பகல் , குனிந்தால் இரவு

துலைவிலுருந்து வெளிச்சம் போட்டு கூப்பிட்டாய்
வேண்டியமட்டும் மின்சாரம் எடுத்துக்கொள் என்று

நீ கோபம் கொண்டு உஷ்ணம் ஏற ஏற
பயத்தில் எங்களுக்கு அன்றோ வேற்க்கிறது

நீ அடிக்க அடிக்க எங்களுக்கு உரைக்கிறது
பொறுக்கமுடியாமல் உனக்காக தலைமுழுகிறோம்

வந்து வந்து ஏன் எங்களை வறுக்கராய்
சிலருக்கு வா வா என்றாலும் மறுக்கறாய்
உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை

வெளிநாட்டினர் உன்னில் குளிக்க விழைகின்றனர் (sunbath)
நாங்களோ உன்னால் குளிக்க விரைகிறோம்

உச்சி நேரத்தில் கானல்நீர் கொண்டு யாரை
தார்ரோட்டில் தாரை வார்த்து கொடுக்கின்றாய்

செடி கொடிக்கு உயிர் கொடுத்து ,எங்களை வாழவைக்கிறாய்
அதனால்தான் வணங்கிகறோம் உன்னை சூரிய நமஸ்காரம்கொண்டு.

Wednesday, 3 April 2013

பசுமை நினைவுகள்

 பசுமை  நினைவுகள் 



கடலூரில்.......


பால்ய பருவம் .. அண்ணா , அக்கா , தம்பிகள் என ஜாலியாக சென்ற நாட்கள் ..
பிஸியான அப்பா , டென்ஷனுடன் அம்மா,  வீட்டில் எப்போதும் வேலைக்குதவியாக  ஆட்கள் ....( உதவி மட்டுமில்லை ! பேய் கதைகளும் சொல்லி அச்சப்படுத்தினார்களே ! )

அடிக்கடி மழை புயல் !

நம் எல்லோரும்   குமரகுருவுடன்   நாயுடனும் மைதானம், பீச்  போவது ......

போகும் வழியில்  தம்பிகள்  எந்த மரத்தில் எதை பறிக்கலாம் என்று நோட்டம் விட்டு பின் திருட்டுத்  தனமாய்  பறித்து மாட்டிக்கொண்டது !

ஸ்கூல் போக அடம் பிடித்து கதறக் கதற சைக்கிளில் போகும் குரு !

ஒரு நாள் வளையலை தொலைத்து வந்த போது  போய் திரும்பி தேடு வளையல் இல்லாமல் வராதே என்றதும் வேண்டாத கடவுள் இல்லை .. கடவுளும் கை கொடுத்தார்  வளையல் தெரு ஓரமாக கிடந்தது !

மழை வந்தால் ஸ்கூல் லீவ் . அதுவும்  குரு வேண்டினால் நடக்கும் நிச்சயமாய்  என அசட்டுதனமாய் நினைத்து அவனை வேண்டும்படி கெஞ்சுவது ! அவனும் கண்ணை மூடி வேண்டுவது போல்  நடிப்பது !

மெல்ல மெல்ல திருட்டுத்தனமாய்  கிச்சனில் பாலாடை,  மற்றும் மில்க் பவுடர்  திருட சரியாக  வந்து பின்னால் நின்று கொண்டு எனக்கும் கொடு இல்லேனா மாட்டி விடுவேன் என குரு  மிரட்டுவது !

பண்டிகை, விடுமுறை நாட்களில் உறவினர் பட்டாளம் ! ஒரே துணியில் ஒரே மதியாக எல்லோருக்கும் அப்பா  ட்ரெஸ் வாங்கி தருவது ......

புதிதாக டேப் ரெகார்டர் வாங்கியபோது அப்பாய்   தலைமையில் அட்டகாசமான கலை  நிகழ்ச்சி !

.நடமாட முடியாமல் படுத்திருக்கும் தாத்தா ...அவருக்குதவியாக  ரெட்டியார் 
 எனக்கு பிடித்த ஹிந்தி கிளாஸ

அப்பா மிக ஸ்ரத்தையுடன் அப்பாய்க்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் துர்கா ஸுத்தம் சொல்லிக் கொடுக்க அவனோ வாயில் நுழையாமல் தவிப்பது!

பாட்டு வாத்தியாருடன் நான் பாட இவர்கள் கிண்டலடிப்பது!!
கிரிக்கெட் .விளையாட்டில் நானும் விளையாடி அடிபட்டுக்கொள்வது!
..............
இப்படி இன்னும் பலப்பல இனிய நினைவுகள்.......
தொடரும்

Tuesday, 19 March 2013

அப்பா எப்ப பேசலாம் ?

நம்ப எப்ப பேசலாம் ? 
அதற்காக , உனுக்கு கடிதம் எழுதம்னு
ரொம்ப நாளா ஆசை. என்னோட நினைவுகளை இங்க போட்டு ,
மனசையே பேனாவா யூஸ் பண்ணி இந்த லெட்டரை எழுதறேன்.
இதை எங்கே போஸ்ட் பண்ணனுமுன்னு டௌப்டெ இல்லை .

உன்னோட அட்ரஸ் -
டாக்டர் தியாகராஜன் c/o ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிகள் .

ஓரளவுக்கு ஞாபகம் இருக்கு , தஞ்சாவூர்ல ஸ்கூல் படிக்கும்போது சைக்கிள்ல
உக்காரவெச்சு ஒரு ஆளோட அனுப்பவ . கூட என் அக்கா வேற  துணைக்கு .
அப்ப உனக்கு ஒரு ஆசை வந்திருக்கும் மனசல ,
நான் ஒரு டாக்டரா வரனுமுன்னு ! 
கடைசி வரைக்கும் நாங்க யாரும் அத பூர்த்தி பண்ணலை .
ஏதோ காரணம் சொல்லி , உன் கனவை , கனவாகவே ஆக்கிடோம் .

கடலூரில் , ராமதாஸ் நாய்டு தெருவில் நம் வாழ்க்கை கலகலப்பாக இருந்தது .
எங்களுக்குதான் எவ்வளவு சௌகரியம் பண்ணி கொடுத்தாய் .
மத்தியானம் லஞ்சு பள்ளிக்கே ஒரு ஆளு மூலமா வந்துரும் .
படுக்கை போட , மடிக்க ,எங்களை கவனிக்க , 
எல்லாத்துக்கும் ஆளு . 
நான் குள்ளமா இருக்ககூடதுன்னு
புள்ளப்ஸ் எடுக்க சொல்லுவ . 
என் நல்லதுக்குத்தான் என்று புரிஞ்சுக்காம
வேண்டா வெறுப்பா பண்ணுவேன் . 
இங்கிலீஷ் சொல்லிகுடுக்க துடிப்ப .
அத புரிஞ்சுகாமே ஓடி ஒளிவேன் .என் மேலதான் எவ்வளுவு அக்கறை ?
எனக்கு சயின்ஸ் சொல்லிகொடுக்க , உன் ஆபிசெலேந்து ,சேஷாத்ரியை
வெச்சு சொல்லிகொடுக்கசொன்னே .
இதே அக்கறை , எங்கள் ஒவுவ்விரடமும் கான்பித்திருக்கிறாய் . 
எங்களுக்காக, 65 வயது வரை ஓடி , ஓடி உழைத்தாயே .!

சென்னைக்கு எடம் பெயர்ந்தோம் .BA  முடிச்சப்பறம் என்ன என்ற கேள்விக்குறிக்கு
முற்றுபுள்ளி வைத்து CA வில் சேர்த்துவிட்டாய் .
நான் கஜனி முஹமது மாதரி படை எடுத்தேன் . 
ஓவ்வரு தடவை பெயில் ஆகும்போதும் , நீ ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை . 
நீ கொடுத்த தையரித்திலே , விடாமல் எழுதி பாஸ்பன்னிட்டேன் .
என்னோட இந்த வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம் .

எனக்காக நீ எவ்வளவு நேரம் ஓதிக்கினாய் . நான் என்ன பண்ணினேன் ? 
நீ கேட்ட கேள்விக்கு ஒரு வரில பதில் சொன்னேன் .
இன்னும் உன்னோடே பேசியிருக்கனுமுன்னு இப்ப தோனுது .
ஒரு நாளைக்கு மகா பெரியவாள பத்தி ,வந்த பெரிய கட்டுரைய
பத்தி சொன்னேன் . 
சொல்லும்போது எனக்கு கண்ணல அழுகை வந்துது . 
உன் கண்ணிலும் அழுகை வந்தது . 
நீ உணர்ச்சிவசபட்டியா என்று கேட்டதுக்கு , இல்ல ," நீ இது சாக்கிட்டு
இவ்வளுவு நேரம் நீ பேசினே , எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ". என்று சொன்னே .
.
அன்னிலேந்து என்னை மாத்திண்டேன் . உன்னேடே நெறைய பேசினேன் .

நான் காலையலே டிபன் சாப்பிடும்போது , நீயும் வந்து உக்காருவே . உடனே , ஹால் லேந்து
அம்மா குரல் வரும்  "உங்களுக்கு என்ன அவசரம் ? அவா எல்லாம் அவசரமா
ஓடிண்டு இருக்கா , நீங்க அப்பறம் சாப்படுங்கோ ". 
லலிதா பதில் "நான் பாத்துகறேன் , அப்பா சாப்பட்டும் ". 
அப்ப நீ என்கிட்டே சொல்லுவே " எனக்கு ஒன்னும் பசிக்கலே ,
பட் உன்னோடு ரெண்டு வார்த்தை பேசிண்டு சாப்பிடலாமுன்னுதான் "

உன்னோடு அந்த கடைசி 5 மாசம் எனுக்கு கெடச்ச வரப்பரசாதம் தினமும் வீட்டில்
இருக்கும்போது  உன்னோடயே இருந்திருக்கேன் .

 2010 .அக்டோபர் 11 ம் தேதி 

இரவு 10 மணிக்கு என்னை பக்கத்தலே உக்கார சொல்லி கை புடிசெண்டே ,
குட்பை என்று சொல்வதற்க்கு. .

அப்பா , இப்ப தினம் உன்னோட பேசறேன் . நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் .!

அப்பா . எப்ப பேசலாம் ?

Monday, 18 March 2013

வாழ்க்கை பயணம்




FROM WEST TO EAST !  வாங்க ஒரு சுற்று போய்  வரலாம் 


கல்யாணக் களிப்போடு நான் போனேன் 


CAMEROUN 


பார்க்கத்தான்   rough and tough

ஆனா  பழகினா  not  much stuff !

Dare devil in  dense forest , 

NOTHING CAN INTIMIDATE THEM !

SANAGA னு ஒரு  RIVER !  அதன் வேகத்தைப் பார்த்தா நடுங்கும் நம் தேகம் !

வந்தது DELIVERY TIME !

முதல் டெலிவரி... வலியால் 8 மணி நேரமாய் துடித்துக் கொண்டிருந்த என்னை  ஒரு  DELIVERIKKA  இத்தனை டிராமா  என்று அலட்சியமா பார்த்தாள்  அந்த டாக்டர்!

பக்கத்துக்கு வார்டு .. நிறை மாத கர்ப்பிணி 

வந்தாள்  படுத்தாள்  அடுத்த நிமிடம் குவா குவா ... 

பொறாமையுடன் அதிசயித்தேன் !  அது அவர்கள் ஷ்டைல் ! 

கவலை  இல்லா மனிதர்கள் ! 

பெரிசும் குடி சிறிசும் குடி  குடியும் குடுத்தனமும் ......



அடுத்து வந்து சேர்ந்தோம் கல்கத்தாவில் !
  
கொல்கத்தா  ! 
என் கடன்  பணி செய்யாதிருப்பதே !  எதற்குமே கவலையில்லை  !  "கீ ஆச்சே !"  தான்
 ( what does it matter !)
ஸ்ட்ரைக்,  தாமதம் , பவர் கட் .... எதற்கும் DONT CARE !  
ஆனால் மனிதர்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ ,
நான்கு  சீசனும்  நேர்த்தியாக  செய்யும் தன வேலையை !

மலரும் கல்கத்தா என்றும்  தரும் இனிமை நினைவுகள் !  

அடுத்த பயணம் பாம்பே !

ஹா ... ஓட்டம் ஓட்டம் கூட்டம் கூட்டம்  ஆனால் எப்போதும் இருக்கவேணும் நாலா புறமும் நோட்டம் 

மாளிகையில் வாழ்ந்த நாங்கள்  நாலு சுவர் வத்திப்பெட்டி வீட்டில் ! 

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பம்பாயில் !

எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இனம் 

FIT OR QUIT  ATTITUDE ... FIT டானோம்  5 வருஷம் !

பின்  வந்தோம் குஜராத் !

மக்கள் சிவப்பு   

பண்டிகை  சிறப்பு 

இல்லை எதற்கும் எதிர்ப்பு 

இனிது இனிது ஊனும் இனிது !  

எதிலும் இனிப்பு   நினைவும் இனிப்பு !

ஆனால் அதனுடன் எதிர்கொண்டேன் இயற்கையின் எதிர்ப்பு 

வெள்ளம்,  புயல் ,  மட்டுமில்லாமல்  பூகம்பமும் சேர்ந்து  அல்லாட வைத்தது இந்த பூமி !


அடுத்து பறந்து தாவினோம் தாய்லாந்து 

ஆஹா  எங்கும் பதுமை எல்லாம் புதுமை !

காணோம் முதுமை !

புன்னகை தேவதைகள்  பேசினார்கள் இனிதாய்  

எனினும்  எதையும் சாதிப்பர்  நேசமாய், துணிவாய் 

"பெயர் போன" நாடானாலும் 

மலைக்க வைக்கும் திறமையும் பண்பும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.

கைக்குட்டைத்  துணியில் பெண்கள் திரிந்தாலும் 

எங்கும் எந்நேரமும் பயமின்றி திரிவதைப் பார்த்து 

நம் நாட்டு அவல நிலையை எண்ணி வெட்கித்தான் போகிறோம் 



அடுத்த பெயர்ச்சி வந்த போது  அதிர்ச்சி ! 

ஆனாலும் உள்ளத்தில் அளவிலா மகிழ்ச்சி 

ஆமாம் பயணமானோம்  பிரமிக்கும் பிரமிடு நாடுக்கு 

எகிப்து !

கைக்குட்டை துணியில்  தோல் தெரிய பவனி வரும் நாட்டிலிருந்து 

தலையிலிருந்து பாதம் வரை தோல் தெரியாதுடுத்தினாலும் 

மலைக்க வைக்கும்  கிளியோபாட்ரா ஏராளம் 

மங்கையர்க்கு சளைத்தவரில்லை நாங்கள் என  களையுடன் உலா வரும் ஆண் இனம் 

மெதுவாகப்பேசி  எதுவானாலும் சாதிப்பார் தாய்லாந்தில் 

ஆனால் இங்கேயோ 

எதுர்த்து பேசியே  எதையும்  செய்யாமல்  சாதிப்பார்  தானே சரியென்று  

இப்படியாக மேற்கிலிருந்து கிழக்கு வரை தொ டருகிறது 

எங்கள் வாழ்க்கை பயணம் !!

Friday, 15 March 2013

பல்



                                                                         பல்                                                                              
                                                           
கடன் கேட்க பல்லை காட்டனும்
கடனை திருப்பி கேட்டா பல்லை தட்டனும்

பொண்ணு ம
சிய பல்லை காட்டணும்
பொண்டாட்டி படிய பல்லை கடிக்கணும்

பல்லை காட்டிதான் பல் தேய்க்கணும்
பல்செட்டை   
கழட்டிதான் பல் தேய்க்கணும்


சரியா கவனிக்கலேன்னா கரை படியும் பல்லுலே
புயல் கறைய கடந்தா தரை தட்டும் கப்பலே

ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி
நாளும் கிழமையும் நமக்கு நியதி

ஆளு எடுப்பாயிருக்க பல்லு அடுக்காயிருக்கணும்
பல்லு எடுப்பாயிருந்தா சொல்லு கடுப்பாக்கிடும் !


பல் இல்லா பொக்கவாய் சிரிப்பில் , பொக்கே பெற்றதாக மகிழ்ந்தேன்
குழந்தையின் பல் முளைக்க , பார்த்ததை பதம் பார்க்க,  பதை பதைத்தேன்

பாவாடையில் பவனி வந்த பாவைக்கு பல் அடுக்காக வர
அவளது கிளிப்பு போட்ட சிரிப்பில் களிப்பானேன்

பள்ளி சீருடையில் சிங்காரித்து , சிரித்துகொண்டே சென்றவள்
சினுங்கிகொண்டே வந்தாள் பல் பதிந்த கைகளோடு , கலங்கிவிட்டேன்

கல்லூரியில் கண்டவனிடம் காட்டாதே பல்லை என்று சொல்லியும்
கசங்கிய காதலோடு கண்கலங்கியபோது , 
காட்டினேன் நல்ல கவனை

கட்டிய கணவனை தட்டியதால் விழுந்த பல்லுக்கு பிராயசித்தமாக
தங்கபல் கட்டி , தயங்காமல் வாய் திறந்தான் எந்நேரமும் சிரித்துகொண்டே

குடும்ப குதுகுலத்தில் , அவரவர் சொந்த பந்தங்களை பார்த்து
வேற்றுபடுத்தினாய்  பல்லை காட்டியும் ,பல்லை கடித்தும்

வந்தது வயோதிகம் , பொக்கவாயை பார்த்து கூப்பிட்டார்கள்
பட்டாணி சாப்ட்டுகொண்டே ,பல்லாங்குழி விளையாட !

ஏன் பாடாபடுத்தினாய் அவன் சொந்தம் வந்தால் 
பல்லைகடித்தும்
பாரபட்சமாக உன் பந்தம் வந்தால்
 பல்லைகாட்டியும்



                                                                 அப்பாய்                                                                                                  

Wednesday, 13 March 2013

கொஞ்சம் விளையாட்டு




கொஞ்சம் விளையாட்டு 



இங்கே கிளிக் செய்து அவன் மூக்கை தொடுங்கள் பார்க்கலாம் !




ஏழின் மகிமை !

ஏழின் மகிமை !









இந்த அற்புதமான பிரபஞ்சத்தில்  நம்மை  அதிசயிக்க வைக்கும் விஷயங்கள் பல உள்ளன !   ஆனால் நமது வேகமான வாழ்க்கையில் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை 
அப்படி சில விஷயங்களை இங்கே  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சில சிறப்புத் தன்மைகள் இருக்கும் . அப்படி பார்க்கும்போது  என்னைக் கவர்ந்த எண் 7 !

இதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம் !

நம் எல்லோருக்கும் தெரிந்த சில 

வண்ணங்கள் 7 
வானவில்லில் நிறங்கள்  7
சுவை 7 -  அறுசுவையோடு  நீர் சுவை 
வாரத்தில் 7 நாட்கள் 
உடலில் உள்ள 7 சக்ரம்
( மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரஹ, அனாஹத, விசுத்த, ஆக்ஞா , சஹஸ்ரஹார)
புனிதமான நதிகள் 7
ஸ்வரங்கள்  7
தொடு உணர்ச்சிகள் 7 .


இந்து மதத்தில் 7 மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது 

சூரியதேவன் தேரில் குதிரைகள் 

சப்தகன்னிகைகள் 

சப்த ரிஷி 

7 லோகங்கள் 

7 நரகங்கள் 

7 கடல்கள் 

7 மலை 

உணர்வு நிலையில் 7 அடுக்கு



1.உறங்கும் நிலை 
2.விழிப்பு நிலை 
3.கனவு நிலை 
4.எப்பொழுதும் விழித்துக்கொண்டு இருக்கும் ஆழ்  நிலை 
5.பிரபஞ்சத்தில்  நடக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ளும் நிலை 
6.இறைவனை உணரும் நிலை 
7.தானும் இறைவனும் ஒன்றே என அறியும் நிலை 



ஆன்மிகத்தை அடைவதற்காக நாம் கடக்க வேண்டிய  7 அடுக்கு நிலை 


புலன்களைச் சார்ந்த முதல் அடுக்கு 
சூழ்ந்திருக்கும் எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆர்வம் சார்ந்த இரண்டாம் அடுக்கு 
காமத்தை துய்க்கத் துடிக்கும் மூன்றாம் அடுக்கு 
குடும்பச் சுமையை தாங்கி, பணம் புகழ் ஈட்டும நான்காம் அடுக்கு 
பொது தொண்டு செய்யவேண்டிய கட்டமான ஐந்தாம் அடுக்கு 
கலைகளில் சிறந்து தெய்வாம்சத்தை உணரும் அடுக்கு 
இறையன்பால் நமக்கு உண்டாகும் அற்புதங்களுடன்  ஆன்ம மலர்ச்சி 

  
இதில் நாம் எங்கே இருக்கிறோம் ! ?

lally

மொழி

                                          மொழி


பத்து மாதம் தாயின் கருவறையே  உறைவிடமானது,


ஊணும் ,உருவமும் தப்பாமல் தாய் தந்தை தந்த வரமானது

இருட்டறையே  இருப்பிடம் ஆனாலும், குழந்தை கொடுத்த


முதல் உதையே தாயோடு பேசும் முதல் மொழியானது.

இருண்ட உலகில் இருந்தது போதும் வெளி உலகைக் காண ,


வந்து விடு என்று தாய் மனம் மருகி குழந்தையுடன் பேச்சு கொடுத்தாள்.  .

உறவுகள் எல்லாம் குழந்தை வரவை ஆவலோடு எதிர் கொள்ள


தாங்கியவள் வலி கொண்டு ஓ என்று அழுததே ,போதித்த மொழியானது .


அதே மொழியில் திருப்பி பேச ,குழந்தை குவா குவா என்று கதறியது  .

வேண்டியதை வாடிக்கையாக்க அழு மொழியே வழி மொழியானது

குழந்தையின் சத்தத்தை சுற்றி   இருந்தொர் இஷ்ட்டத் திற்கு மொழிபெயர்த்தார்கள்

தவழ்ந்துகொண்டு தத்து பித்து என்று அது  மழலை மொழியானது .

கல்லூரி கலாட்டாவில் தமிழுக்கு தாலாட்டு , மற்றதுக்கு வாய்ப் பூட்டு ,

என்ற குரலுக்கு துணைபோனது , மற்றமொழிகள் மௌனியானது .

காதல் வய
ப்பட்டு கண் விழிகள் பேசியது காதல் மொழியானது.

முகம் பார்த்து  மூன்று முடிச்சுடன் மூச்சுக் காற்று  நெருக்கத்தில்


வாழ்க்கை  வழக்கமானபோது மொழி ஏது , வழியலே வாடிக்கியாது 

குடும்ப சுமை குத்தகைக்கு வர நெருக்கம் போய் இறுக்கமே இருந்தது

மொழிக்கு முழுக்கு போட்டு பரஸ்பரம்   பழிபோடலே பழகிப் போச்சு 

கைத்தடி காலத்தில் கரடியா கத்தினாலும் ,எந்த மொழிக்கும் பதில் ஏது !


பின்குறிப்பு !

பல மொழிகள் தெரிந்த விட்டலுக்கு இந்த கவிதை அற்பணிக்கப் படுகிறது 


                                                                                                 அப்பாய் 

Monday, 11 March 2013

இறைவனை அறிவோம் 5.மகாசிவராத்திரி தரிசனம்


                                                          மகாசிவராத்திரி  தரிசனம்
புதுக்கோட்டையிலிருந்து 1 கிமி கைலசாநாதபுரம். ஸ்ரீகைலாசநாதர் , இவருக்கு படிகாசுநாதர் என்ற 
சிறப்பு பெயர் உண்டு .இந்த பகுதியை சேர்த்த பால் வியாபாரிகள் ,சிலர் சுயம்பு வாக வெளிப்பட்ட 
சிவலிங்க திருமேனிக்கு 1 படி பால் உற்றி அபிஷேகம் செய்தனர் . அதற்கு விலையாக சிவலிங்கம் 
அருகில் பொற்காசுகள் தினமும் இருந்தன . அதனால் ஸ்ரீபடிகாசுநாதர் என்று பெயர் ஏற்பட்டது .
அம்பாள் ஸ்ரீப்ரசன்னநாயகியும் வரப்ராசதி .


கும்பகோணத்திலிரிந்து  18கி .மீ  தூரத்தில் உள்ளது  திரு ஆயப்பாடி.
இது  ஸ்ரீ சண்டகேஸ்வரர்க்கு  முக்தி  அளித்த  ஸ்தலம் .
சகல தோஷங்களும் நீங்கும் .
சிவனாருக்கு  அருகிலேயே  காட்ச்சி தருகிறார்  சண்டிகேஸ்வரர் 

                                                                                                          லலிதா சந்திரசேகரன் 

Friday, 8 March 2013

HAPPY BIRTHDAY !


                                         


HAPPY BIRTHDAY TO YOU !


Have you ever experienced the pleasure of splashing ice cold water on your face on a day when sun is at its merciless best?

Have you ever felt, a smile automatically lighting up your face, when someone mentions a name?

Have you ever looked forward to playing  host to a person even after a lousy and tiring day in office, because that person is "cho chweet"

 May be there are few acquaintaces that you know of, 
who fit this bill, but one image that conjures up in most of our mind is that of .. who else but...Aarthee.

Simple yet lovable, forthright and fun loving - the first thought that comes to your mind when you bask in her warmth and congeniality is the honesty of her affection.

No pretense, no formalities, no exhibition of perfunctory respect - she is what she is. Take it or leave it.... whatever....
 Isnt it a coincidence that dear  Arthi's birtday is celebrated as woman's day, world over?

 It is said a girl when she is a kid has to have a mind, when she grows up has to have an attitude and when she becomes a lady, should have class.

It may sound cliched or even a tad bit exaggerated but I mean it when I say you did display and displaying these traits. Way to go girl.


 Happy B'day & many happy returns Aarthee.


     From    T Swaminathan and uncles and aunties !

OUR GROUP SONGS