Tuesday, 19 March 2013

அப்பா எப்ப பேசலாம் ?

நம்ப எப்ப பேசலாம் ? 
அதற்காக , உனுக்கு கடிதம் எழுதம்னு
ரொம்ப நாளா ஆசை. என்னோட நினைவுகளை இங்க போட்டு ,
மனசையே பேனாவா யூஸ் பண்ணி இந்த லெட்டரை எழுதறேன்.
இதை எங்கே போஸ்ட் பண்ணனுமுன்னு டௌப்டெ இல்லை .

உன்னோட அட்ரஸ் -
டாக்டர் தியாகராஜன் c/o ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிகள் .

ஓரளவுக்கு ஞாபகம் இருக்கு , தஞ்சாவூர்ல ஸ்கூல் படிக்கும்போது சைக்கிள்ல
உக்காரவெச்சு ஒரு ஆளோட அனுப்பவ . கூட என் அக்கா வேற  துணைக்கு .
அப்ப உனக்கு ஒரு ஆசை வந்திருக்கும் மனசல ,
நான் ஒரு டாக்டரா வரனுமுன்னு ! 
கடைசி வரைக்கும் நாங்க யாரும் அத பூர்த்தி பண்ணலை .
ஏதோ காரணம் சொல்லி , உன் கனவை , கனவாகவே ஆக்கிடோம் .

கடலூரில் , ராமதாஸ் நாய்டு தெருவில் நம் வாழ்க்கை கலகலப்பாக இருந்தது .
எங்களுக்குதான் எவ்வளவு சௌகரியம் பண்ணி கொடுத்தாய் .
மத்தியானம் லஞ்சு பள்ளிக்கே ஒரு ஆளு மூலமா வந்துரும் .
படுக்கை போட , மடிக்க ,எங்களை கவனிக்க , 
எல்லாத்துக்கும் ஆளு . 
நான் குள்ளமா இருக்ககூடதுன்னு
புள்ளப்ஸ் எடுக்க சொல்லுவ . 
என் நல்லதுக்குத்தான் என்று புரிஞ்சுக்காம
வேண்டா வெறுப்பா பண்ணுவேன் . 
இங்கிலீஷ் சொல்லிகுடுக்க துடிப்ப .
அத புரிஞ்சுகாமே ஓடி ஒளிவேன் .என் மேலதான் எவ்வளுவு அக்கறை ?
எனக்கு சயின்ஸ் சொல்லிகொடுக்க , உன் ஆபிசெலேந்து ,சேஷாத்ரியை
வெச்சு சொல்லிகொடுக்கசொன்னே .
இதே அக்கறை , எங்கள் ஒவுவ்விரடமும் கான்பித்திருக்கிறாய் . 
எங்களுக்காக, 65 வயது வரை ஓடி , ஓடி உழைத்தாயே .!

சென்னைக்கு எடம் பெயர்ந்தோம் .BA  முடிச்சப்பறம் என்ன என்ற கேள்விக்குறிக்கு
முற்றுபுள்ளி வைத்து CA வில் சேர்த்துவிட்டாய் .
நான் கஜனி முஹமது மாதரி படை எடுத்தேன் . 
ஓவ்வரு தடவை பெயில் ஆகும்போதும் , நீ ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை . 
நீ கொடுத்த தையரித்திலே , விடாமல் எழுதி பாஸ்பன்னிட்டேன் .
என்னோட இந்த வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம் .

எனக்காக நீ எவ்வளவு நேரம் ஓதிக்கினாய் . நான் என்ன பண்ணினேன் ? 
நீ கேட்ட கேள்விக்கு ஒரு வரில பதில் சொன்னேன் .
இன்னும் உன்னோடே பேசியிருக்கனுமுன்னு இப்ப தோனுது .
ஒரு நாளைக்கு மகா பெரியவாள பத்தி ,வந்த பெரிய கட்டுரைய
பத்தி சொன்னேன் . 
சொல்லும்போது எனக்கு கண்ணல அழுகை வந்துது . 
உன் கண்ணிலும் அழுகை வந்தது . 
நீ உணர்ச்சிவசபட்டியா என்று கேட்டதுக்கு , இல்ல ," நீ இது சாக்கிட்டு
இவ்வளுவு நேரம் நீ பேசினே , எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ". என்று சொன்னே .
.
அன்னிலேந்து என்னை மாத்திண்டேன் . உன்னேடே நெறைய பேசினேன் .

நான் காலையலே டிபன் சாப்பிடும்போது , நீயும் வந்து உக்காருவே . உடனே , ஹால் லேந்து
அம்மா குரல் வரும்  "உங்களுக்கு என்ன அவசரம் ? அவா எல்லாம் அவசரமா
ஓடிண்டு இருக்கா , நீங்க அப்பறம் சாப்படுங்கோ ". 
லலிதா பதில் "நான் பாத்துகறேன் , அப்பா சாப்பட்டும் ". 
அப்ப நீ என்கிட்டே சொல்லுவே " எனக்கு ஒன்னும் பசிக்கலே ,
பட் உன்னோடு ரெண்டு வார்த்தை பேசிண்டு சாப்பிடலாமுன்னுதான் "

உன்னோடு அந்த கடைசி 5 மாசம் எனுக்கு கெடச்ச வரப்பரசாதம் தினமும் வீட்டில்
இருக்கும்போது  உன்னோடயே இருந்திருக்கேன் .

 2010 .அக்டோபர் 11 ம் தேதி 

இரவு 10 மணிக்கு என்னை பக்கத்தலே உக்கார சொல்லி கை புடிசெண்டே ,
குட்பை என்று சொல்வதற்க்கு. .

அப்பா , இப்ப தினம் உன்னோட பேசறேன் . நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் .!

அப்பா . எப்ப பேசலாம் ?

2 comments:

  1. very touching and I was literally moved to tears Abbai. I can feel tje emotional connect that you have with appa. All of us do have but the intensity of your feelings is at a much higher level. Appa also had a special bonding with you, which is not surprising as you have been with for almost half a century

    Your post made me realize what I have missed

    ReplyDelete
  2. yes chama,the bonding was unique .he is a great man. thank you for your comments.

    ReplyDelete

OUR GROUP SONGS