Friday, 1 March 2013

அலைகள் ALAIGAL

                                                         அலைகள் 


அலைகளே , அலையாதே , நிலம் வரத் துடிக்காதே !
ஆழ் கடலில் அமைதியாக அமர்
ந்திருக்கிறாய் ,
பின் ஏன் கரை வர கலங்குகிறாய்?

எத்தனை  முறை திருப்பினாலும் , திரும்புகறாய்
நான் ஒரு பினாமி வைத்தால் , நீ சுனாமியாக வருகிறாய் !

என்  கவலைகளை
க் களைய , ஆழ் கடல் வரைக்  கூட்டிப் போ
என்  துயரத்தை துடைக்க தொலைதூரம் என்னைத்  தூக்கிப் போ  !.

என்  பெற்றோர் தவத்தில் அவதரித்தேன் பச்சிளம் பாலனாக ,
குழந்தையாக இருக்கும்வரை கும்மாளந்தான் கொண்டாட்டம்தான்
சிரித்தால் சிரிக் கிறார்கள் , அழுதால் அழுகிறார்கள் .

பின் பள்ளிச் சுமையை ஏற்றினார்கள், படி படி என்று படுத்தினார்கள்
கல்லூரிக்கு கடத்தினார்கள் , கவலையே  கரையானது

வாலிப வயசில் வயப்பட்டேன் , வந்தவளே நல்லவள் என்று
என்  மதி மயங்கி , நிம்மதி துலைத்தேன் .

கரம் பிடித்தவளே , கடவுள் தந்த வரம் ஆனது
காலங்கள் கவலையின்றி கடந்துபோனது .

குடும்ப சுமையை சுமக்க , வாழ்க்கை எந்திரமானது
தோளோடு தூங்கிய பந்தம், பந்தாடியது !

வாழந்தது போதும்  என்று , ஆழ் கடலே  அடைக்கலம்
என்று  அடங்கவந்தேன் , ஆனால் நீயோ நகரம் நோக்கி நகருகிறாய்

வேண்டாம்  நகரம் , அது நரகம் !  அலைகளே  என்னை அழைத்துப் போ
நாம் ஆழ்கடலில் ஆனந்தமாக அமைதி கொள்வோம்.



                                                                                     -------------  அப்பாய் 



ஓடி ஓடி நீ வந்தாய் எதைத் தேடி 

வந்த வேகத்திலே  திரும்பினாய்
உள்  கடலைக் கூடி 

ஆழ் கடலின் அமைதியும் கரை கடலின் கொந்தளிப்பும் !
நுரைக்கின்றாய் நாள் முழுதும் எதை உணர்த்த? 

வெளி உலகில் நித வாழ்வில் களிப்பாய் நீ துடிப்பாய் 
ஆனால்
ஆழ் மனதில் இறை உணர்வில்  அமைதியாய்
எந்நாளும் ஓ  மனமே  நீ இருப்பாய்

என்றுணர்த்தும் தத்துவமோ சொல் அலையே 

                                                                                             --  லல்லி 


3 comments:

  1. Dear Lalli,

    nice and meaningful words. good keep it up.

    abbai

    ReplyDelete
  2. Abbai & Lalli,

    I am floored....I want to add something but sattiyil irundhaaldhaane agappaiyil varum

    I can only applaud.... I can not poetry regardless of language. May be a report/Column but definitely poems are not my cup of tea

    ReplyDelete
    Replies
    1. Hi
      Thanks for the comments!
      Chama, please. Do go ahead with your write up.
      Lally

      Delete

OUR GROUP SONGS