நம்ப எப்ப பேசலாம் ?
அதற்காக , உனுக்கு கடிதம் எழுதம்னு
ரொம்ப நாளா ஆசை. என்னோட நினைவுகளை இங்க போட்டு ,
மனசையே பேனாவா யூஸ் பண்ணி இந்த லெட்டரை எழுதறேன்.
இதை எங்கே போஸ்ட் பண்ணனுமுன்னு டௌப்டெ இல்லை .
உன்னோட அட்ரஸ் -
டாக்டர் தியாகராஜன் c/o ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிகள் .
ஓரளவுக்கு ஞாபகம் இருக்கு , தஞ்சாவூர்ல ஸ்கூல் படிக்கும்போது சைக்கிள்ல
உக்காரவெச்சு ஒரு ஆளோட அனுப்பவ . கூட என் அக்கா வேற துணைக்கு .
அப்ப உனக்கு ஒரு ஆசை வந்திருக்கும் மனசல ,
நான் ஒரு டாக்டரா வரனுமுன்னு !
கடைசி வரைக்கும் நாங்க யாரும் அத பூர்த்தி பண்ணலை .
ஏதோ காரணம் சொல்லி , உன் கனவை , கனவாகவே ஆக்கிடோம் .
கடலூரில் , ராமதாஸ் நாய்டு தெருவில் நம் வாழ்க்கை கலகலப்பாக இருந்தது .
எங்களுக்குதான் எவ்வளவு சௌகரியம் பண்ணி கொடுத்தாய் .
மத்தியானம் லஞ்சு பள்ளிக்கே ஒரு ஆளு மூலமா வந்துரும் .
படுக்கை போட , மடிக்க ,எங்களை கவனிக்க ,
எல்லாத்துக்கும் ஆளு .
நான் குள்ளமா இருக்ககூடதுன்னு
புள்ளப்ஸ் எடுக்க சொல்லுவ .
என் நல்லதுக்குத்தான் என்று புரிஞ்சுக்காம
வேண்டா வெறுப்பா பண்ணுவேன் .
இங்கிலீஷ் சொல்லிகுடுக்க துடிப்ப .
அத புரிஞ்சுகாமே ஓடி ஒளிவேன் .என் மேலதான் எவ்வளுவு அக்கறை ?
எனக்கு சயின்ஸ் சொல்லிகொடுக்க , உன் ஆபிசெலேந்து ,சேஷாத்ரியை
வெச்சு சொல்லிகொடுக்கசொன்னே .
இதே அக்கறை , எங்கள் ஒவுவ்விரடமும் கான்பித்திருக்கிறாய் .
எங்களுக்காக, 65 வயது வரை ஓடி , ஓடி உழைத்தாயே .!
சென்னைக்கு எடம் பெயர்ந்தோம் .BA முடிச்சப்பறம் என்ன என்ற கேள்விக்குறிக்கு
முற்றுபுள்ளி வைத்து CA வில் சேர்த்துவிட்டாய் .
நான் கஜனி முஹமது மாதரி படை எடுத்தேன் .
ஓவ்வரு தடவை பெயில் ஆகும்போதும் , நீ ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை .
நீ கொடுத்த தையரித்திலே , விடாமல் எழுதி பாஸ்பன்னிட்டேன் .
என்னோட இந்த வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம் .
எனக்காக நீ எவ்வளவு நேரம் ஓதிக்கினாய் . நான் என்ன பண்ணினேன் ?
நீ கேட்ட கேள்விக்கு ஒரு வரில பதில் சொன்னேன் .
இன்னும் உன்னோடே பேசியிருக்கனுமுன்னு இப்ப தோனுது .
ஒரு நாளைக்கு மகா பெரியவாள பத்தி ,வந்த பெரிய கட்டுரைய
பத்தி சொன்னேன் .
சொல்லும்போது எனக்கு கண்ணல அழுகை வந்துது .
உன் கண்ணிலும் அழுகை வந்தது .
நீ உணர்ச்சிவசபட்டியா என்று கேட்டதுக்கு , இல்ல ," நீ இது சாக்கிட்டு
இவ்வளுவு நேரம் நீ பேசினே , எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ". என்று சொன்னே .
.
அன்னிலேந்து என்னை மாத்திண்டேன் . உன்னேடே நெறைய பேசினேன் .
நான் காலையலே டிபன் சாப்பிடும்போது , நீயும் வந்து உக்காருவே . உடனே , ஹால் லேந்து
அம்மா குரல் வரும் "உங்களுக்கு என்ன அவசரம் ? அவா எல்லாம் அவசரமா
ஓடிண்டு இருக்கா , நீங்க அப்பறம் சாப்படுங்கோ ".
லலிதா பதில் "நான் பாத்துகறேன் , அப்பா சாப்பட்டும் ".
அப்ப நீ என்கிட்டே சொல்லுவே " எனக்கு ஒன்னும் பசிக்கலே ,
பட் உன்னோடு ரெண்டு வார்த்தை பேசிண்டு சாப்பிடலாமுன்னுதான் "
உன்னோடு அந்த கடைசி 5 மாசம் எனுக்கு கெடச்ச வரப்பரசாதம் தினமும் வீட்டில்
இருக்கும்போது உன்னோடயே இருந்திருக்கேன் .
2010 .அக்டோபர் 11 ம் தேதி
இரவு 10 மணிக்கு என்னை பக்கத்தலே உக்கார சொல்லி கை புடிசெண்டே ,
குட்பை என்று சொல்வதற்க்கு. .
அப்பா , இப்ப தினம் உன்னோட பேசறேன் . நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் .!
அப்பா . எப்ப பேசலாம் ?
Can it ever be too late to give it a try, to give it a whirl, to take your best shot and see where it takes you? This blog is about everything ! And dedicated to our parents...
Tuesday, 19 March 2013
Monday, 18 March 2013
வாழ்க்கை பயணம்
FROM WEST TO EAST ! வாங்க ஒரு சுற்று போய் வரலாம்
கல்யாணக் களிப்போடு நான் போனேன்
CAMEROUN
பார்க்கத்தான் rough and tough
ஆனா பழகினா not much stuff !
Dare devil in dense forest ,
NOTHING CAN INTIMIDATE THEM !
SANAGA னு ஒரு RIVER ! அதன் வேகத்தைப் பார்த்தா நடுங்கும் நம் தேகம் !
வந்தது DELIVERY TIME !
முதல் டெலிவரி... வலியால் 8 மணி நேரமாய் துடித்துக் கொண்டிருந்த என்னை ஒரு DELIVERIKKA இத்தனை டிராமா என்று அலட்சியமா பார்த்தாள் அந்த டாக்டர்!
பக்கத்துக்கு வார்டு .. நிறை மாத கர்ப்பிணி
வந்தாள் படுத்தாள் அடுத்த நிமிடம் குவா குவா ...
பொறாமையுடன் அதிசயித்தேன் ! அது அவர்கள் ஷ்டைல் !
கவலை இல்லா மனிதர்கள் !
பெரிசும் குடி சிறிசும் குடி குடியும் குடுத்தனமும் ......
அடுத்து வந்து சேர்ந்தோம் கல்கத்தாவில் !
கொல்கத்தா !
என் கடன் பணி செய்யாதிருப்பதே ! எதற்குமே கவலையில்லை ! "கீ ஆச்சே !" தான்
( what does it matter !)
ஸ்ட்ரைக், தாமதம் , பவர் கட் .... எதற்கும் DONT CARE !
ஆனால் மனிதர்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ ,
நான்கு சீசனும் நேர்த்தியாக செய்யும் தன வேலையை !
மலரும் கல்கத்தா என்றும் தரும் இனிமை நினைவுகள் !
அடுத்த பயணம் பாம்பே !
ஹா ... ஓட்டம் ஓட்டம் கூட்டம் கூட்டம் ஆனால் எப்போதும் இருக்கவேணும் நாலா புறமும் நோட்டம்
மாளிகையில் வாழ்ந்த நாங்கள் நாலு சுவர் வத்திப்பெட்டி வீட்டில் !
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பம்பாயில் !
எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இனம்
FIT OR QUIT ATTITUDE ... FIT டானோம் 5 வருஷம் !
பின் வந்தோம் குஜராத் !
மக்கள் சிவப்பு
பண்டிகை சிறப்பு
இல்லை எதற்கும் எதிர்ப்பு
இனிது இனிது ஊனும் இனிது !
எதிலும் இனிப்பு நினைவும் இனிப்பு !
ஆனால் அதனுடன் எதிர்கொண்டேன் இயற்கையின் எதிர்ப்பு
வெள்ளம், புயல் , மட்டுமில்லாமல் பூகம்பமும் சேர்ந்து அல்லாட வைத்தது இந்த பூமி !
அடுத்து பறந்து தாவினோம் தாய்லாந்து
ஆஹா எங்கும் பதுமை எல்லாம் புதுமை !
காணோம் முதுமை !
புன்னகை தேவதைகள் பேசினார்கள் இனிதாய்
எனினும் எதையும் சாதிப்பர் நேசமாய், துணிவாய்
"பெயர் போன" நாடானாலும்
மலைக்க வைக்கும் திறமையும் பண்பும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.
கைக்குட்டைத் துணியில் பெண்கள் திரிந்தாலும்
எங்கும் எந்நேரமும் பயமின்றி திரிவதைப் பார்த்து
நம் நாட்டு அவல நிலையை எண்ணி வெட்கித்தான் போகிறோம்
அடுத்த பெயர்ச்சி வந்த போது அதிர்ச்சி !
ஆனாலும் உள்ளத்தில் அளவிலா மகிழ்ச்சி
ஆமாம் பயணமானோம் பிரமிக்கும் பிரமிடு நாடுக்கு
எகிப்து !
கைக்குட்டை துணியில் தோல் தெரிய பவனி வரும் நாட்டிலிருந்து
தலையிலிருந்து பாதம் வரை தோல் தெரியாதுடுத்தினாலும்
மலைக்க வைக்கும் கிளியோபாட்ரா ஏராளம்
மங்கையர்க்கு சளைத்தவரில்லை நாங்கள் என களையுடன் உலா வரும் ஆண் இனம்
மெதுவாகப்பேசி எதுவானாலும் சாதிப்பார் தாய்லாந்தில்
ஆனால் இங்கேயோ
எதுர்த்து பேசியே எதையும் செய்யாமல் சாதிப்பார் தானே சரியென்று
இப்படியாக மேற்கிலிருந்து கிழக்கு வரை தொ டருகிறது
எங்கள் வாழ்க்கை பயணம் !!
Friday, 15 March 2013
பல்
பல்
கடன் கேட்க பல்லை காட்டனும்
கடனை திருப்பி கேட்டா பல்லை தட்டனும்
பொண்ணு மசிய பல்லை காட்டணும்
பொண்டாட்டி படிய பல்லை கடிக்கணும்
பல்லை காட்டிதான் பல் தேய்க்கணும்
பல்செட்டை கழட்டிதான் பல் தேய்க்கணும்
சரியா கவனிக்கலேன்னா கரை படியும் பல்லுலே
புயல் கறைய கடந்தா தரை தட்டும் கப்பலே
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி
நாளும் கிழமையும் நமக்கு நியதி
ஆளு எடுப்பாயிருக்க பல்லு அடுக்காயிருக்கணும்
பல்லு எடுப்பாயிருந்தா சொல்லு கடுப்பாக்கிடும் !
பல் இல்லா பொக்கவாய் சிரிப்பில் , பொக்கே பெற்றதாக மகிழ்ந்தேன்
குழந்தையின் பல் முளைக்க , பார்த்ததை பதம் பார்க்க, பதை பதைத்தேன்கடன் கேட்க பல்லை காட்டனும்
கடனை திருப்பி கேட்டா பல்லை தட்டனும்
பொண்ணு மசிய பல்லை காட்டணும்
பொண்டாட்டி படிய பல்லை கடிக்கணும்
பல்லை காட்டிதான் பல் தேய்க்கணும்
பல்செட்டை கழட்டிதான் பல் தேய்க்கணும்
சரியா கவனிக்கலேன்னா கரை படியும் பல்லுலே
புயல் கறைய கடந்தா தரை தட்டும் கப்பலே
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி
நாளும் கிழமையும் நமக்கு நியதி
ஆளு எடுப்பாயிருக்க பல்லு அடுக்காயிருக்கணும்
பல்லு எடுப்பாயிருந்தா சொல்லு கடுப்பாக்கிடும் !
பல் இல்லா பொக்கவாய் சிரிப்பில் , பொக்கே பெற்றதாக மகிழ்ந்தேன்
பாவாடையில் பவனி வந்த பாவைக்கு பல் அடுக்காக வர
அவளது கிளிப்பு போட்ட சிரிப்பில் களிப்பானேன்
பள்ளி சீருடையில் சிங்காரித்து , சிரித்துகொண்டே சென்றவள்
சினுங்கிகொண்டே வந்தாள் பல் பதிந்த கைகளோடு , கலங்கிவிட்டேன்
கல்லூரியில் கண்டவனிடம் காட்டாதே பல்லை என்று சொல்லியும்
கசங்கிய காதலோடு கண்கலங்கியபோது ,
சினுங்கிகொண்டே வந்தாள் பல் பதிந்த கைகளோடு , கலங்கிவிட்டேன்
கல்லூரியில் கண்டவனிடம் காட்டாதே பல்லை என்று சொல்லியும்
கசங்கிய காதலோடு கண்கலங்கியபோது ,
காட்டினேன் நல்ல கணவனை
தங்கபல் கட்டி , தயங்காமல் வாய் திறந்தான் எந்நேரமும் சிரித்துகொண்டே
குடும்ப குதுகுலத்தில் , அவரவர் சொந்த பந்தங்களை பார்த்து
வேற்றுபடுத்தினாய் பல்லை காட்டியும் ,பல்லை கடித்தும்
வந்தது வயோதிகம் , பொக்கவாயை பார்த்து கூப்பிட்டார்கள்
பட்டாணி சாப்ட்டுகொண்டே ,பல்லாங்குழி விளையாட !
ஏன் பாடாபடுத்தினாய் அவன் சொந்தம் வந்தால்
பல்லைகடித்தும்
பாரபட்சமாக உன் பந்தம் வந்தால்
பாரபட்சமாக உன் பந்தம் வந்தால்
பல்லைகாட்டியும்
அப்பாய்
Wednesday, 13 March 2013
ஏழின் மகிமை !
ஏழின் மகிமை !
இதில் நாம் எங்கே இருக்கிறோம் ! ?
இந்த அற்புதமான பிரபஞ்சத்தில் நம்மை அதிசயிக்க வைக்கும் விஷயங்கள் பல உள்ளன ! ஆனால் நமது வேகமான வாழ்க்கையில் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை
அப்படி சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சில சிறப்புத் தன்மைகள் இருக்கும் . அப்படி பார்க்கும்போது என்னைக் கவர்ந்த எண் 7 !
இதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம் !
நம் எல்லோருக்கும் தெரிந்த சில
வண்ணங்கள் 7
வானவில்லில் நிறங்கள் 7
சுவை 7 - அறுசுவையோடு நீர் சுவை
வாரத்தில் 7 நாட்கள்
உடலில் உள்ள 7 சக்ரம்
( மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரஹ, அனாஹத, விசுத்த, ஆக்ஞா , சஹஸ்ரஹார)
புனிதமான நதிகள் 7
ஸ்வரங்கள் 7
தொடு உணர்ச்சிகள் 7 .
இந்து மதத்தில் 7 மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது
சூரியதேவன் தேரில் குதிரைகள்
சப்தகன்னிகைகள்
சப்த ரிஷி
7 லோகங்கள்
7 நரகங்கள்
7 கடல்கள்
7 மலை
உணர்வு நிலையில் 7 அடுக்கு
1.உறங்கும் நிலை
2.விழிப்பு நிலை
3.கனவு நிலை
4.எப்பொழுதும் விழித்துக்கொண்டு இருக்கும் ஆழ் நிலை
5.பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ளும் நிலை
6.இறைவனை உணரும் நிலை
7.தானும் இறைவனும் ஒன்றே என அறியும் நிலை
ஆன்மிகத்தை அடைவதற்காக நாம் கடக்க வேண்டிய 7 அடுக்கு நிலை
புலன்களைச் சார்ந்த முதல் அடுக்கு
சூழ்ந்திருக்கும் எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆர்வம் சார்ந்த இரண்டாம் அடுக்கு
காமத்தை துய்க்கத் துடிக்கும் மூன்றாம் அடுக்கு
குடும்பச் சுமையை தாங்கி, பணம் புகழ் ஈட்டும நான்காம் அடுக்கு
பொது தொண்டு செய்யவேண்டிய கட்டமான ஐந்தாம் அடுக்கு
கலைகளில் சிறந்து தெய்வாம்சத்தை உணரும் அடுக்கு
இறையன்பால் நமக்கு உண்டாகும் அற்புதங்களுடன் ஆன்ம மலர்ச்சி
lally
மொழி
மொழி
பத்து மாதம் தாயின் கருவறையே உறைவிடமானது,
ஊணும் ,உருவமும் தப்பாமல் தாய் தந்தை தந்த வரமானது
இருட்டறையே இருப்பிடம் ஆனாலும், குழந்தை கொடுத்த
முதல் உதையே தாயோடு பேசும் முதல் மொழியானது.
இருண்ட உலகில் இருந்தது போதும் வெளி உலகைக் காண ,
வந்து விடு என்று தாய் மனம் மருகி குழந்தையுடன் பேச்சு கொடுத்தாள். .
உறவுகள் எல்லாம் குழந்தை வரவை ஆவலோடு எதிர் கொள்ள
தாங்கியவள் வலி கொண்டு ஓ என்று அழுததே ,போதித்த மொழியானது .
அதே மொழியில் திருப்பி பேச ,குழந்தை குவா குவா என்று கதறியது .
வேண்டியதை வாடிக்கையாக்க அழு மொழியே வழி மொழியானது
குழந்தையின் சத்தத்தை சுற்றி இருந்தொர் இஷ்ட்டத் திற்கு மொழிபெயர்த்தார்கள்
தவழ்ந்துகொண்டு தத்து பித்து என்று அது மழலை மொழியானது .
கல்லூரி கலாட்டாவில் தமிழுக்கு தாலாட்டு , மற்றதுக்கு வாய்ப் பூட்டு ,
என்ற குரலுக்கு துணைபோனது , மற்றமொழிகள் மௌனியானது .
காதல் வயப்பட்டு கண் விழிகள் பேசியது காதல் மொழியானது.
பத்து மாதம் தாயின் கருவறையே உறைவிடமானது,
ஊணும் ,உருவமும் தப்பாமல் தாய் தந்தை தந்த வரமானது
இருட்டறையே இருப்பிடம் ஆனாலும், குழந்தை கொடுத்த
முதல் உதையே தாயோடு பேசும் முதல் மொழியானது.
இருண்ட உலகில் இருந்தது போதும் வெளி உலகைக் காண ,
வந்து விடு என்று தாய் மனம் மருகி குழந்தையுடன் பேச்சு கொடுத்தாள். .
உறவுகள் எல்லாம் குழந்தை வரவை ஆவலோடு எதிர் கொள்ள
தாங்கியவள் வலி கொண்டு ஓ என்று அழுததே ,போதித்த மொழியானது .
அதே மொழியில் திருப்பி பேச ,குழந்தை குவா குவா என்று கதறியது .
வேண்டியதை வாடிக்கையாக்க அழு மொழியே வழி மொழியானது
குழந்தையின் சத்தத்தை சுற்றி இருந்தொர் இஷ்ட்டத் திற்கு மொழிபெயர்த்தார்கள்
தவழ்ந்துகொண்டு தத்து பித்து என்று அது மழலை மொழியானது .
கல்லூரி கலாட்டாவில் தமிழுக்கு தாலாட்டு , மற்றதுக்கு வாய்ப் பூட்டு ,
என்ற குரலுக்கு துணைபோனது , மற்றமொழிகள் மௌனியானது .
காதல் வயப்பட்டு கண் விழிகள் பேசியது காதல் மொழியானது.
முகம் பார்த்து மூன்று முடிச்சுடன் மூச்சுக் காற்று நெருக்கத்தில்
வாழ்க்கை வழக்கமானபோது மொழி ஏது , வழியலே வாடிக்கியானது
குடும்ப சுமை குத்தகைக்கு வர நெருக்கம் போய் இறுக்கமே இருந்தது
மொழிக்கு முழுக்கு போட்டு பரஸ்பரம் பழிபோடலே பழகிப் போச்சு
கைத்தடி காலத்தில் கரடியா கத்தினாலும் ,எந்த மொழிக்கும் பதில் ஏது !
பின்குறிப்பு !
பல மொழிகள் தெரிந்த விட்டலுக்கு இந்த கவிதை அற்பணிக்கப் படுகிறது
அப்பாய்
Monday, 11 March 2013
இறைவனை அறிவோம் 5.மகாசிவராத்திரி தரிசனம்
மகாசிவராத்திரி தரிசனம்
புதுக்கோட்டையிலிருந்து 1 கிமி கைலசாநாதபுரம். ஸ்ரீகைலாசநாதர் , இவருக்கு படிகாசுநாதர் என்ற
சிறப்பு பெயர் உண்டு .இந்த பகு தியை சேர்த்த பால் வியாபாரிகள் ,சிலர் சுயம்பு வாக வெளிப்பட்ட
சிவலிங்க திருமேனிக்கு 1 படி பால் உற்றி அபிஷேகம் செய் தனர் . அதற்கு விலையாக சிவலிங் கம்
அருகில் பொற்காசுகள் தினமும் இருந்தன . அதனால் ஸ்ரீபடிகாசுநாதர் என்று பெயர் ஏற்பட்டது .
அம்பாள் ஸ்ரீப்ரசன்னநாயகியும் வரப்ராசதி .
கும்பகோணத்திலிரிந்து 18கி .மீ தூரத்தில் உள்ளது திரு ஆயப்பாடி.
இது ஸ்ரீ சண்டகேஸ்வரர்க்கு முக்தி அளித்த ஸ்தலம் .
சகல தோஷங்களும் நீங்கும் .
சிவனாருக்கு அருகிலேயே காட்ச்சி தருகிறார் சண்டிகேஸ்வரர்
லலிதா சந்திரசேகரன்
Friday, 8 March 2013
HAPPY BIRTHDAY !
HAPPY BIRTHDAY TO YOU !
Have you ever experienced the pleasure of
splashing ice cold water on your face on a day when sun is at its merciless
best?
Have you ever felt, a smile automatically
lighting up your face, when someone mentions a name?
Have you ever looked forward to
playing host to a person even after a lousy and tiring day in office,
because that person is "cho chweet"
May be there are few acquaintaces that you
know of,
who fit this bill, but one image that conjures up in most of our mind is
that of .. who else but...Aarthee.
Simple yet lovable, forthright and fun loving -
the first thought that comes to your mind when you bask in her warmth and
congeniality is the honesty of her affection.
No pretense, no formalities, no exhibition of
perfunctory respect - she is what she is. Take it or leave it.... whatever....
Isnt it a coincidence that dear
Arthi's birtday is celebrated as woman's day, world over?
It is said a girl when she is a kid has
to have a mind, when she grows up has to have an attitude and when she becomes
a lady, should have class.
It may sound cliched or even a tad bit
exaggerated but I mean it when I say you did display and displaying these
traits. Way to go girl.
Happy B'day & many happy returns
Aarthee.
From T Swaminathan and uncles and aunties !
நண்பேன்டா !
நண்பேன்டா !
முதல் நாள் பள்ளியில் பால் வடியும் உன் முகம் பார்த்தேன்
முடிவு செய்தேன் , நீ தான் இனி என் பால்ய நண்பன் என்று
தோளோடு தோள் உரசி , கை கோர்த்து சுற்றி திரிந்தோம்
வகுப்புகள் உயர உயர , உயிர் நண்பனானோம்
பள்ளியில் எள்ளி நகைத்தார்கள் , நாம் ஈர் உடல் ஓர் உயிர் என்று
கவலை என்றி கல் எறிந்தோம் , கண்ணாடிக்கும் , மாங்காயுக்கும்
பள்ளி தேர்வில் மலங்க மலங்க முழித்தாலும் , முடிவில்
மங்காமல் ,தங்காமல் வெளிவந்தோம் கல்லூரிக்கு கால் வைக்க
கட் அடித்து கண் அடித்து கலகலப்பானது கல்லூரி
கயல் விழியின் கண் பார்வைக்கு ஏங்கி முட்டி கொண்டோம் முதல் முறையாக
அவள் ஒரு கயவனை காதல் கொண்டவுடன், நாம் கட்டிகொண்டோம்
அறியாமையை தூக்கியெரிந்து , நம் நட்பின் ஆழத்தை அறிந்துகொண்டோம்
அக்னியை வலம் வந்தவுளுடன் , நம் வளு இழந்து , அவள் வயப்பட்டோம்
அவள் மூட்டிய பொறமை தீயில் , நம் நட்பை அன்றோ பொசுக்கினோம்
வந்த தாரதுக்காக , வாழ்க்கை தரத்தை உயர்த்த போட்டி போட்டோம்
வந்த பாதை மறுந்து , நம் நட்பை பொட்டிப் பாம்பாகினோம்
இப்போது பதைபதைக்கறோம் , பழைய நட்பை புதுப்பிக்க
புரிந்தது இன்று , என்றும் நீ என் நண்பேண்டா !
Thursday, 7 March 2013
இறைவனை அறிவோம் 4. பூஜைகளால் - சிறப்பு பெற்ற சிவ ஸ்தலங்கள்
பூஜைகளால் - சிறப்பு பெற்ற சிவ ஸ்தலங்கள்
ராமேஸ்வரம் - காலசந்தி பூஜை
திருவானைக்காவல் - உச்சிக்கால பூஜை
திருவாரூர் - சாயங்கால பூஜை
மதுரை - ராக்கால பூஜை
சிதம்பரம் - அர்த்தகால பூஜை
லலிதா சந்திரசேகர்
இறைவனை அறிவோம் 3. சிவன் பஞ்ச பூத ஸ்தலங்கள்
சிவன் பஞ்ச பூத ஸ்தலங்கள்
பூமி - காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர்
ஆகாசம் சிதம்பரம் - நடராஜர்
காற்று காலஹஸ்தி - காலஹச்தீஸ்வரர்
நெருப்பு திருவண்ணாமலை - அருனாச்சலஸ்வரர்
நீர் திருவானைக்காவல் - ஜலகண்டேஸ்வரர்
லலிதா சந்திரசேகர்
இறைவனை அறிவோம் 2. நடராஜர் - ஐந்து சபைகள்
நடராஜர் - ஐந்து சபைகள்
திருவாலாங்காடு - ரத்ன சபை
சிதம்பரம் - கனக சபை
மதுரை - வெள்ளி சபை
திருநெல்வேலி - தாமர சபை
குற்றாலம் - சித்ர சபை
லலிதா சந்திரசேகர்
Tuesday, 5 March 2013
அருவி , waterfalls
அருவி
விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கடவுள் உன்னை தருவித்ததனால்
அதுவே மருவி உன்னை அருவி என்று அழைக்கிறார்களோ !
நீ கீழே விழுந்து , ஐயோ என்ற அலறலோடு மலையில் மோதும் போது ,
நாங்கள் என்னே ஓசை என்று உன் மேல் ஆசை கொள்கிறோமே !
நீ பாறையில் மோதிய வலியில் கண்ணீர் சிந்தும்போது ,
நாங்கள் என்னே சாரல் என்று மகிழ்கரோமே !
விழுந்த களைப்பில் , விதியே கதி என்று ஓடும்போது
நாங்கள் கங்கை , யமுனை நதிகள் என்று பெயர் சொல்கறோமே !
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் , எங்கள் தாகம் தீர்த்து பயிர் செழிக்க
வணங்குகிறோம் உன் நல்ல உள்ளத்தை பெரும் உவகை கொண்டு
உன்னை வணங்கி , நீராடி எங்கள் பாவத்தை கழித்தும்,
புண்ணியத்தை கூட்டியும் எங்கள் வாழ்க்கைக் கணக்கை நேர் செய்கிறோம் !
கூட்டல் ,கழித்தலில் , பாவமே பாரமாகி போதுமடா பூமி என்று
கடவுளை நாடி ,கடல் மடியை வேண்டி ஓடி விட்டாயே !.
அப்பாய்
Monday, 4 March 2013
பிரமிக்க வைக்கும் பிரமிட்
பிரமிக்க வைக்கும் பிரமிட்
எகிப்து நாட்டின் தலை நகரமான கெய்ரோவில் கிசா என்ற இடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மாபெரும் பிரமிடு பார்ப்பவர்களை பரவசமாக்கி பிரமிக்க வைக்கின்றது !
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே இப்படி ஒரு கட்டிட அமைப்பைக் கட்டிய எகிப்தியர்களின் ஆற்றலை வியக்காமல் இருக்க முடியாது.
கிசாவின் பெரிய பிரமிட், Khufu என்ற தலைவனுக்காக ஒரு கல்லறையாக கட்டப்பட்டது . பிரமிடு கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆயிற்று என கூறப்படுகிறது.
கிசாவின் பெரிய பிரமிட் இரண்டு சவக்கிடங்கு கோயில்கள் என்று சொல்லலாம் !
கிசாவின் பெரிய பிரமிட் பற்றி சில சுவாரசியமான உண்மைகள்
- பண்டைய உலக அதிசயங்கள் ஏழில் மீதமுள்ளது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே.
- பெரிய பிரமிட் 4000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அமைத்த மிக உயரமான அமைப்பு
- ராஜாவின் அறை , ராணியின் அறை மற்றும் முடிவுறாத அறை - ஆக மூன்று அறைகள் பெரிய பிரமிட் உள்ளே உள்ளன.
- 2.5 முதல் 20 to 70 டன் எடையுள்ள சுமார் 2,000,000 கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது
இவை சூரிய வெளிச்சத்தில கண்ணாடியைப் போல் ப்ராகசித்தனவாம் !
- பெரிய பிரமிடின் உயரம் சுமார் 480 அடி ! கீழ் பாகம் சுமார் 755 சதுர அடி ( சுமார் பத்து ஜம்போ ஜெட் விமானங்களை நிறுத்தும் இடத்தை போல் )
- வெளியில் சுட்டெரிக்கும் வெப்பமாக இருந்தாலும் பிரமிடின் உள்ளே வெப்பநிலை,68 ° F மாறாமல் நிலையானதாக இருக்கும்.
- பிரமிடின் சுற்றிய நீளம் 36524 pyramid inch ... ஒரு வருடத்தில் உள்ள நாட்கள் ( with the decimals in place )
எகிப்தியர்கள் இறப்பிற்குப் பின் வாழ்வு உண்டென்று நம்பியதால், சிலர் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே தங்களுக்கென்று கல்லறை கட்டிக்க் கொண்டனர். அது மட்டுமல்ல தங்களுக்கு விருப்பமான எல்லா பொருள்களையும் செல்லப் பிராணிகளையும் கூட இறந்த பின் அனுபவிக்க தன இறந்த உடலுடன் வைத்து விட ஏற்பாடுகள் செய்து கொண்டனர். இறந்தபின் உடலை மம்மியாக செய்து சவப்பெட்டியில் வைத்து விடுவர்
The dimensions of the Ante-Chamber also relate to the solar year. Some examples are:
(1) The length of the Ante-Chamber (116.2603 P. inches) is equal to the diameter of a circle whose circumference is 365.24235 P. inches.
(2) From the centre of the Ante-Chamber to the end wall of the King's Chamber is 365.242353 P. inches.
(3) From the same plane to the far end of the Coffer in the King's Chamber is 365.2423 P. inches.
(4) From the front wall of the Ante-Chamber to the back face of the Granite Leaf is 36.524 P. inches.
These few examples should suffice to indicate representational functions of the solar year. The scientific facts monumentalised in the Great Pyramid did not emerge accidentally; a superior knowledge of geometry, mathematics and astronomy would have been essential notwithstanding the means and will-power to express them in structural form.
| The length of a base is 9131 Pyramid Inches from corner to corner in a straight line. | |
| The length of a base side at the base socket level is 9,131 Pyramid Inches or 365.24 Pyramid Cubits. | |
| The length of a base side at sidereal socket level is 9,131.4 Pyramid Inches or 365.256 Pyramid Cubits. | |
| The length of the perimeter at the sidereal socket level is 36,525.63629 Pyramid Inches. | |
| The perfect formula height of the pyramid including the missing apex is 5 813.2355653763 Pyramid Inches, calculated from perimeter of base divided by 2 Pyramid Inches. | |
| The height to the missing apex is 5,812.98 Pyramid Inches. | |
| The volume of the pyramid is: V = 1/3 base area x height = 161,559,817,000 cubic Pyramid Inches = 10,339,828.3 cubic Pyramid Cubits. [(5,813.2355653 Pyramid Inches)/3 * 9 131 Pyramid Inches * 9 131 Pyramid Inches] |
sources http://www.newdawnmagazine.com/
http://abundanthope.net
Subscribe to:
Comments (Atom)
-
* கொரோனா * வருடம் பிறந்தது, இருபதுஇருபது என்று நாங்கள் இருப்புதும், இறப்பதும் உன் கையில் என்றானது உலகையே சின்னாபின்னமாக்க , அவத...
-
What a fun it was to gather voices and create a music challenge with all our family members! Enjoy this here






